Saturday, March 10, 2012

நதிபோல ஓடிக்கொண்டிரு!


சூப்பர் மார்க்கெட். நான்கு பேர் கூடைகளும் வண்டிகளுமாகப் பில் போடுவதற்கான வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.
திடீரென்று எங்கிருந்தோ ஒருவர் உள்ளே நுழைந்தார். ‘எக்ஸ்க்யூஸ்மீ, என்கிட்ட ரெண்டே ரெண்டு ஐட்டம்தான் இருக்கு. நான் முதல்ல பில் போட்டுக்கட்டுமா?’ என்றார்.

’அப்ப நாங்கல்லாம் என்ன மாங்கா மடையனுங்களா?’ என்று பதில் வந்தது. ‘ஒழுங்கா க்யூவில பின்னாடி போய் நில்லுங்க!’

’அதில்ல சார், நீங்க எல்லாரும் முப்பது, நாப்பது ஐட்டம்ஸ் பில் போடப்போறீங்க. அதுவரைக்கும் நான் காத்திருக்கணுமா? எனக்கு டைம் வேஸ்ட்தானே? என்னோட ரெண்டு ஐட்டம்ஸை பில் போடறதுக்கு அரை நிமிஷம்தான் ஆகும். அதனால உங்களுக்குப் பெரிய தாமதம் ஆகிடாது!’

’ம்ஹூம். முறைப்படி க்யூவில வாங்க!’

‘ஓகே!’ என்று அவர் தோளைக் குலுக்கிக்கொண்டார். வரிசையில் பின்பக்கமாகச் சென்று நின்றார்.
அங்கே இருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘நீங்க வேணும்ன்னா எனக்கு முன்னாடி பில் போட்டுக்கோங்க. நோ ப்ராப்ளம்’ என்றார்.

அவருக்கு ஆச்சர்யம். ‘எல்லாரும் வரிசையை மீறினா கோவப்படுவாங்க. நீங்க தானா முன்வந்து உங்க இடத்தை எனக்குத் தர்றீங்களே!’ என்றார்.

‘இதைப்பத்தி ஒரு பழைய ஜென் கவிதை இருக்கு. தெரியுமா?’
‘என்னது?’
‘ஒரு துறவி,
பின்னால் நிற்பதன்மூலம் முன்னே வருகிறார்!
கடைசியாக இருப்பதன்மூலம் முதலாவதாக வருகிறார்!
காலியாக இருப்பதன்மூலம் முழுமை பெறுகிறார்!
தன்னலமற்று வாழ்வதால் நிம்மதியை அடைகிறார்!’
‘இதுக்கு என்ன அர்த்தம்? புரியலையே!’

’இதுமாதிரி க்யூ வரிசைப் போட்டி வரும்போது ‘நீங்க முதல்ல போங்க’ன்னு வழி விட்டு ஒதுங்கச் சொல்லுது ஜென்’ என்றார் அந்தப் பெண். ‘இதுமாதிரி போட்டிகள், பொறாமைகள், நீ முந்தி, நான் முந்தி சண்டைகள்லாம் அர்த்தம் இல்லாதவை. நாம ஒரு நதிமாதிரிதான் ஓடிகிட்டிருக்கணும். எப்பவாச்சும் ஒரு நதியும் இன்னொரு நதியும் போட்டி போட்டுகிட்டு ரேஸ் விட்டுப் பார்த்திருக்கீங்களா?’

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment