Showing posts with label chennai. Show all posts
Showing posts with label chennai. Show all posts

Saturday, October 13, 2012

பெருங்குடி எஃபெக்ட்...

இடம்: பெருங்குடி
நேரம்: காலை மணி 5:30சுமார்
பங்கு பெறுவோர்: ரவி, தெரு நாய்(கள்)

போன தடவ இந்தியா வந்தப்ப, சமத்தா காலைல எழுந்து வாக்கிங் போகலாம்னு நினைச்சேன். 

"ரவி அப்படியே இந்த காய்கறியெல்லாம் வாங்கிகிட்டு வந்திடுங்களேன்", என்றாள் என்னவள்.  

"வாக்கிங் போகும் போது நான் கைல எதுவும் எடுத்துப் போக மாட்டேன், இதெல்லாம் தூக்கிக்கிட்டு நடக்க முடியாது", மறுத்தேன் நான். 

இருந்தாலும் நிராகரிக்கிறோமே என்று மனசு குறு குறுத்திங்... "ஓகே உனக்கு வாங்கிக் கொடுத்துட்டு நான் வாக்கிங் போறேன்" என்று சொல்லிவிட்டு பை, பணம் எடுத்துக் கொண்டு நடையை கட்டினேன்.

"குட் மார்னிங் சாப்", வணங்கினான் செக்கியூரிடி.  "குட் மார்னிங் ஜி, ராத்திரி நல்லா தூங்குனீங்களா?" என்று சாதாரணமாகத்தான் விசாரித்தேன்... அவர் கொஞ்சம் அசடு வழியவே விவரம் புரிந்து அவரை தாண்டி மேலும் நகர்ந்தேன்...

கேட்டை விட்டு வெளியே போனேன்... இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்கள் நடந்து போயிக் கொண்டிருந்தார்கள்...

அவசரமாக அவசரமாக கடைக்கு சென்று என்னவள் சொன்ன கறிகாய்களை வாங்கித் திரும்பினேன் வீட்டுக்கு...

ஆஹா செத்தாண்டா சேகரு... ஏதோ ஒரு தெரு நாய் (நிஜ நாய்தான்) "டோய் இவன் என்ன நம்ம ஏரியாவவுக்கு புதிசா இருக்கான்"ன்னு சொல்லுறா மாதிரி கொர்ன்னு சொல்லிச்சு... நான் கண்டுக்கலே.  ரெண்டு அடி மேலே எடுத்து வெச்சேன் நடையைக் கட்ட.

ஆஹா தெரு நாய்ங்களுக்குத்தான் என்ன ஒற்றுமை... ஒரு நாயி குரல் கொடுத்துச்சு, 4~5 நாய்ங்க சேர்ந்துகிடுச்சு...  இதென்னடா வம்பாப் போச்சுன்னு தெரியாத்தனமா கொஞ்சம் வேகம் கூட்டினேன்.  அவ்வளோதான் என் பின்னாலே வந்து ஒரே லொள்ளு...

அதற்குள் இன்னும் 2~3 நாயி சேர்ந்திடுச்சு... எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...15 வருஷத்துல இதெல்லாம் மறந்து போச்சு... நல்ல வேளை அந்த பக்கம் போகும் ஒருவர் தெருவோரம் இருந்த கல்லை எடுத்து ஒரு நாய் மேல் வீச எல்லா நாயும் ஓடியேப் போச்சு.

நன்றி நிமித்தமாக அவரைப் பார்த்து புன்முறுவலிட்டேன்... 

"என்ன சார் புதிசா" என்றார்... 

"ஆமாம்" என்றேன். 

"பழகிடும்..." என்றார்.

எதை பழகிடும்ன்னு சொன்னார் என்ற கேள்வியோடு வீட்டுக்குப் போயி சட்டையை கழட்டி விட்டேன்.

"ஏங்க வாக்கிங் போகலே?" என்று எங்கோ என் மனைவி கேட்ப்பது போல இருந்தது...

போவேன் வாக்கிங்க்கு???