Showing posts with label fact. Show all posts
Showing posts with label fact. Show all posts

Tuesday, January 31, 2012

முன் பின்...!

திருமணத்திற்கு முன்
************************
“வானத்தில் நட்சத்திரங்கள் ஏன் இன்று பளிச்சென்று இல்லை?” என்று கேட்டாள் அவள்.

அருகிலிருந்த அவன் சொன்னான். “உன் கண்களின் ஒளி வெள்ளத்தில் நட்சத்திரங்கள் மங்கிப் போய் விட்டன.”

உடனே அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். முதல் நாள் சந்திப்பில் நடந்தது இது.

திருமணத்திற்குப் பின்
*************************
“வானத்தில் மிகவும் அருகே உள்ள நட்சத்திரத்தை அடைய எத்தனை தந்திக் கம்பங்கள் நடவேண்டும்” என்று அவள் அவனது கையைப் பற்றியபடி கேட்டாள்.

“மண்ணாங்கட்டி! கொஞ்சம் புத்திசாலித்தனமாகப் பேசித் தொலையேன்” கையை உதறியபடி சொன்னான் அவன்.

#படித்ததில் பிடித்தது

Sunday, January 29, 2012

அம்மா அதிகம் சாப்பிடுவாள்…!

சுடச் சுட உணவு இருந்தால் - தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பறிமாறினால் - அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக் கொண்டு உணவு ஊட்டினால் - தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் - தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே - அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

#படித்ததில் பிடித்தது