Showing posts with label moral. Show all posts
Showing posts with label moral. Show all posts

Monday, July 15, 2013

மூன்று மருமகள்கள்...

ஒரு சமயம் ஒரு ஊரில் ஒரு பெருஞ்செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.  அவருக்கு 3 மகன்கள்.  அவர்களை அன்புடனும், அறிவுடனும் வளர்த்து வந்தார்.  இருப்பினும் கொஞ்சம் கண்டிப்பானவர், சிறு தவறு நேர்ந்தாலும் அதை மன்னிக்க மாட்டார்.

மகன்கள் நங்கு வளர்ந்து மணம் முடிக்கும் வயதையும் அடைந்தனர்.  மூவருக்கும் மணம் முடித்தார்.  மணம் முடித்த கையோடு, அவர் தன் ஊரில் இருக்கும் பெரியவர்களை அழைத்து விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

வருபவர்கள் மிகவும் மரியாதைக்குறியவர்கள் என்பதால் தன் மனைவிக்கும், மருமகளுக்கும், விருந்தோம்பும் அறிவுரைகளை கூறிக்கொண்டிருந்தார்.  மருமகள்கள் புதிது என்பதால் மறுபடியும் மறுபடியும், "ஏதேனும் தவறு நடந்தால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்று கிட்டத்தட்ட மிரட்டினார்.

விருந்துக்கான நாள் வந்தது.  அலங்காரம், சமையல் எல்லாம் தடபுடலாக நடந்தது.  விருந்தினர் எல்லோரும் வந்தாயிற்று.  சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, சாப்பிடலாமே என்றார்.

முதல் மருமகள் தன் மாமனாரின் அறிவுரைப்படி பலகை வைத்து, இலையை போட்டார்.

இரண்டாம் மருமகள், தன் மாமியாருடனும், அண்ணியுடனும் இலையில் எல்லா பதார்த்தங்களையும் பறிமாறினார்.

விருந்தினர் பறிமாறிய எல்லாவற்றையும் பார்த்து பூரிப்படைந்தனர்.  சாப்பிட முற்பட்டனர்.

முதல் மருமகள், இரண்டாம் மருமகள் தன் அறிவுரைப்படி செவ்வனே செய்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார் மாமனார்.  இதைக் கண்ட மூன்றாம் மருமகளுக்கு ஒரே படபடப்பு. எங்கே தன் பங்கில் குறை வந்துவிடுமோ என்று.

உடனேயே தனக்கு கொடுத்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்.  என்ன என்று கேட்கிறீர்களா? அதான் "இலையை எடுப்பது".

சாப்பிட்டார்களா இல்லையா என்று கூட கவனிக்காமல் தனக்கு விதிக்கப்பட்ட வேலையில் மட்டுமே குறியாக இருந்து சரியாக செய்து விட்டதாக எண்ணிக்கொண்டார்.

பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இப்படித்தான் நிஜ வாழ்கையிலும் பலர் உள்ளனர்.

Saturday, July 13, 2013

Don't try to change the world...!

Once upon a time, there was a king who ruled a prosperous country. One day, he went for a trip to some distant area of his country. When he was back to his palace, he complained that his feet were very painful, as it was the first time that he went for such a long trip, and the road that he went through was very rough and stony.

He then ordered his people to cover every road of theentire country with leather.  Definitely, this would need thousands of cow's skin, and would cost a huge amount of money. 

Then one of his wise servants dared himself to tell the king, “Why do you have to spend that unnecessary amount of money? Why don’t you just cut a little piece of leather to cover your feet?”

The king was surprised, but he later agreed to his suggestion, to make a “shoe” for himself.

There is actually a valuable lesson of life in this story: To make this world a happy place to live, you better change yourself, your heart and not the world.

Wednesday, June 20, 2012

நடிப்பு...

பள்ளிக் கூடத்தில் புதிதாக பயிற்சியர் ஆசிரியையாக சேர்ந்தாள் லைலா.  பள்ளிக்கு சென்ற முதல் நாளன்று தலைமை ஆசிரியை பள்ளியின் நிறைய விதிமுறைகள், வழிமுறைகளைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.  அவற்றை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டும் அவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டும் இருந்தாள் லைலா.

திடீரென "நான் பயிற்சி கொடுக்கும் போது அங்கே என்ன செய்யுறீங்க 
லைலா", என்று  சற்று உரக்கவே கேட்டார் தலைமை ஆசிரியை.

"நீங்கள் கூறுவதை குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன்.   மேலும் இவற்றை ஆவணமாக்கி விட்டால் பின்னர் வரும் பயிற்சியர் ஆசிரியர்க்கும் உபயோகமாக இருக்குமே என்று எனது ஸ்மார்ட் போனில் குறிப்பெடுக்கிறேன், இவற்றை எளிதாக கணிணிக்கு அனுப்ப முடிவதால் நேரமும் மிச்சம் ஆகுமே", என்று பதில் அளித்தாள் 
லைலா.

அந்த பதிலில் தலைமை ஆசிரியை அடைந்த மனநிறைவை அவர் முகம் போன விதம் காட்டியது.

'சில நேரங்களில் வினைத்திறமிக்க முறையில் பணியாற்றினாலும் அதை பாராட்டக் கூடிய நிலையில் மேலதிகாரிகள் இருப்பதில்லை', என்று 
லைலாவின் கணவர் கூறியது ஏனோ சட்டென நினைவுக்கு வந்தது.

அடுத்த நாள் மறக்காமல் ஒரு குறிப்பேட்டு புத்தகத்தை பையில் எடுத்து வைக்க மறக்கவில்லை 
லைலா.

சில சமயங்களில் நாம் என்னதான் புதுமையாகவும், வினைத்திறனுடனும் செய்தாலும் மற்றவருக்காக பாரம்பரிய முறையில் செய்வது போல நடிக்கவே வேண்டியுள்ளது.




Saturday, March 10, 2012

Haste makes Waste


A woman had a pet mongoose. It was very faithful. One day she went to the market, leaving her baby in the care of the mongoose. At that time a big cobra entered the house. The mongoose killed it after a long and fierce fight. When the woman came back she saw the mongoose lying at the entrance. She noticed its blood-covered mouth. In her haste the woman thought that the mongoose had killed her baby. In a moment of sudden fury, the woman threw the water pot on the mongoose and killed it. Alas! When she entered the house she was filled with remorse. Her baby was playing cheerfully. Nearby a big cobra lay dead. The woman shed tears of grief fondling the carcass of the mongoose. 

MORAL: Do not act in haste.

Who would bell the cat?


There was a grocery shop in a town. Plenty of mice lived in that grocery shop. Food was in plenty for them. They ate everything and spoiled all the bags. They also wasted the bread, biscuits and fruits of the shop.
The grocer got really worried. So, he thought, "I should buy a cat and let it stay at the grocery. Only then I can save my things."

He bought a nice, big fat cat and let him stay there. The cat had a nice time hunting the mice and killing them. The mice could not move freely now. They were afraid that anytime the cat would eat them up.
The mice wanted to do something. They held a meeting and all of them tweeted "We must get rid of the cat. Can someone give a suggestion"?

All the mice sat and brooded. A smart looking mouse stood up and said, "The cat moves softly. That is the problem. If we can tie a bell around her neck, then things will be fine. We can know the movements of the cat".

“Yes, that is answer,” stated all the mice. An old mouse slowly stood up and asked, "Who would tie the bell?" After some moments there was no one there to answer this question.

MORAL: 1 implementation is much better than 100 idea

Look before You leap....


Once, a fox was very thirsty. 
He saw a big well nearby and peeped into it. 
The fox slipped and fell into the well. 
He tried to come out. 
But he could not do so. 
After some time, there came a goat who was also thirsty. 
He too peeped into the well. 
The fox saw the goat and said from inside the well, “The water is very sweet. Come and Come to enjoy.”
The foolish goat also jumped into the well. 
The clever fox climbed on the back of the goat and jumped out of the well. 

#This happened to me in my life as well...and yes I was a goat...

A friend in need is a friend indeed...


**Originally posted on Facebook.Notes on Mar 15, 2011 just 4 days after Major Earthquake/Tsunami that Hit North Japan**

Taro and Ravi were friends.  On a holiday they went into a forest.  They were enjoying the beauty of nature. Suddenly they saw a bear coming at them. They were frightened.

Ravi who knew climbing trees ran up to a tree and climbed up quickly. He did not think of Taro. Taro did not know tree climbing.

Taro thought for a second.  He had heard bear do not prefer dead bodies.  He fell to the ground and held his breath.  The bear sniffed him and thought he was dead.  So, he went away. 

Ravi asked Taro, "What did the bear whisper into your ears?” 

Taro replied, "The bear asked me to keep away from friends like you" and went on his way. 

MORAL : A friend in need is a friend indeed.

Tuesday, January 31, 2012

LOVE is BLIND?

There was a blind girl who hated herself just because she’s blind.

She hated everyone, except her loving boyfriend. He’s always there for her.

She said that if she could only see the world, she would marry her boyfriend.

One day, someone donated a pair of eyes to her and then she can see everything, including her boyfriend.

Her boyfriend asked her, “now that you can see the world, will you marry me?”

The girl was shocked when she saw that her boyfriend is blind too, and refused to marry him.

Her boyfriend walked away in tears, and later wrote a letter to her saying. “Just take care of my eyes dear.”

=====================
This is how human mind changes when the status changed.
Only few remember what life was before, and who’s always been there even in the most painful situations.

#படித்ததில் பிடித்தது

குரங்கை நினைக்கக் கூடாது…!


அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கைஅதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும்என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமைமருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்றுஉண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை.கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனைசிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான்.ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்துஎப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம்தீர்வு இருப்பதாகக் கூறினான்.

அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள்கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர்.“வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா”என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமைமருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும்புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன்திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்றுகூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக்கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன்,என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக்கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும்மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடிகொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம்முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும்தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய்தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்யவேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும்நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப்பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பிவைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான்.மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டேஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்துஅதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்குமருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக்கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்றஇயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்துமுயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும்மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றியயோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல்வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

#படித்ததில் பிடித்தது

Sunday, January 29, 2012

அழுத்தாதே!


தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு சின்னப் பெட்டி.

மாணவர்களின் சத்தம் அடங்கியதும் பேராசியர் அந்தப் பெட்டியைத் திறந்தார். ஒரு பையனை அழைத்தார். ‘இது என்ன? தெரிகிறதா?’

‘மணல்!’

‘உன்னால இதைக் கையில அள்ளமுடியுமா?’

’ஓ, முடியுமே!’ அவன் கை நிறைய மணலை அள்ளிக் காண்பித்தான். மீண்டும் அதைப் பெட்டியிலேயே போட்டான்.

’இப்போ நீ இந்த மணலைக் கையில எடுத்து அழுத்திப் பிடிச்சுக்கோ’ என்றார் பேராசிரியர். ‘ஒரு சின்னத் துளிகூடக் கீழே சிந்தக்கூடாது.’

அந்த இளைஞன் முகத்தில் லேசான பதற்றம். கைப்பிடி மணலை அள்ளி எடுத்து அழுத்தினான். அது அவனது விரல்களுக்கு நடுவே வழிந்து சிதறியது. எல்லோரும் சிரித்தார்கள்.

‘கவலைப்படாதே. மறுபடி முயற்சி பண்ணு!’ என்றார் பேராசிரியர். ‘இந்தமுறை இன்னும் நல்லா அழுத்திப் பாரு’ என்று ஊக்குவித்தார்.

இளைஞன் மீண்டும் மண்ணை அள்ளினான். அதை அழுத்திப் பிடிக்க முயன்றான். அது இன்னும் வேகமாகச் சிதறியது.

இப்போது பேராசிரியர் இன்னொரு மாணவியை அழைத்தார். ‘நீ இந்த மண்ணைக் கீழே சிந்தாம கையில வெச்சிருக்கணும்ன்னா என்ன செய்வே?’

’அழுத்தாம லேசாப் பிடிச்சுக்குவேன் ப்ரொஃபஸர்’ என்றாள் அவள். ‘ஏன்னா நான் அழுத்த அழுத்த மணல் இன்னும் வேகமா வெளியே போகுது!’

‘எக்ஸாக்ட்லி’ என்று புன்னகை செய்தார் ப்ரொஃபஸர். ‘ஜென் வாழ்க்கையோட ஒரு முக்கியமான கோட்பாடு இது. நீங்க ஒரு நெகட்டிவ் விஷயத்தை நினைச்சு மேலும் மேலும் கவலைப்படறபோது உங்களையும் அறியாம அதுக்குக் கூடுதல் ஆற்றலைக் கொடுத்துடறீங்க. அது நிஜமாவே நடந்துடறதுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்திடறீங்க!’

’அதுக்குப் பதிலா மணலை அழுத்தாம பிடிக்கப் பழகுங்க. எதையும் ரிலாக்ஸா அணுகத் தெரிஞ்சுகிட்டோம்ன்னா எந்தக் கவலையும் பெரிய சுமையாத் தோணாது. எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் சுலபமா சந்திச்சுச் சரி பண்ணிடலாம்!’

There is another version of philosophy as well in this. More you take more you loose, if you take less sand in your hand you may not loose any. **Never be greedy**

Every one must have faith in themselves...


There is no one who does not love themselves, has no belief in themselves and has no ambition to rise higher and higher.  Even a man who does not have faith in God has faith in himself and desires to have strength by which to cultivate faith in himself.

There was once a guru communicating wisdom to people who came for his darshan with flowers and fruits.  One day, as the offerings were plenty, he called a disciple and asked him to cut the fruits and arrange for its distribution as prasâda(m).  The disciple reported to the guru that all was ready for distribution and asked him who would be given first.  The guru asked him to start with the person in whom he has the greatest faith and the highest confidence.  All the people assembled there thought that the disciple would first give the fruit to the teacher and then distribute to the others.  But the disciple did not do so.  He took the first fruit himself.  When the surprised onlookers asked for an explanation he said that since he had had the greatest confidence and affection for himself, he took the first fruit.

=============================
On a lighter sense, if you watch most of  cooks/chefs will taste their dish by themselves, before serving to others...

அறிவுரை...


அப்பா அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா”“இப்பத் தானே அம்மா ஒரு கதை புத்தகத்தைப் படிச்சுக் காமிச்சாங்க. அப்பாவுக்குத் தூக்கம் வருது. தூங்கணும்”

“அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா. ஒரே ஒரு கதை அப்பா”

“இல்லைம்மா. அப்பா பாட்டு பாடறேன். சீக்கிரம் தூங்கு. காலையில எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்”

“ஒரே ஒரு கதைப்பா. ஒன்னே ஒன்னு. ப்ளீஸ். ப்ளீஸ்”

“உழந்தாள் நறுநெய்…”

“ம்ம்ம். கதை வேணும்பா”

“ஓரோ தடா உண்ண…”

“ம். சரி. பாடுங்க”

“உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ணஇழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்முழந்தாள் இருந்தவா காணீரேமுகில் முலையீர் வந்து காணீரே“

“தூங்கிட்டியா அம்மா?”

“தூக்கம் வர்றமாதிரி இருக்கு. ஆனா இன்னும் தூங்கலை”

“சரி. கதை சொல்லவா?”

“கதையா! ம்.ம். சொல்லுங்கப்பா. சொல்லுங்க”

“எந்தக் கதை வேணும்?”

“ம்.ம். கண்ணன் கதை. கண்ணன் கதை”

“ம். அப்பாவும் அதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரி. கண்ணனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்?”

“வெண்ணெய். வெண்ணெய்”

“ஆமாம். வெண்ணெய் தான். ஒரு தடவை அவங்கம்மா..”

“யசோதாவா? தேவகியா?”

“யசோதாம்மா தான். அவங்க ஒரு தடவை ரொம்ப நேரம் வேலை பார்த்து ஒரு பானை நிறைய வெண்ணெய் சேர்த்து வச்சாங்களாம்”

“எம்புட்டு பெரிய பானைப்பா?”

“நம்ம வீட்டுல இட்லி மாவு வப்போமே. அது மாதிரி பெரிய பானை”

“இட்லி மாவு பானையில இருக்காதே. பாத்திரத்துல தானே இருக்கும்”

“ஹிஹி ஆமாம். அந்த மாதிரி பெரிய பானைன்னு சொல்றேன்”

“அப்ப சரி”

“அம்மா அந்தப் பக்கம் போனவுடனே இந்தக் கண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா?”

“தெரியும் தெரியும். அந்தப் பானையில இருக்குற வெண்ணெயை எல்லாம் தின்னுட்டான்”

“உனக்கும் குடுத்தானா என்ன?”

“இல்லை. எனக்குக் குடுக்கலை”

“அப்ப எப்படி உனக்குத் தெரியும்?”

“அப்பா தான் சொன்னீங்க. இன்னொரு கதை சொல்றப்ப”

“ம்.  . ஆமாம். அந்தப் பானையில இருக்குற எல்லா வெண்ணெயையும் அவன் வழிச்சு சாப்டான். கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. அம்மாவுக்கோ கோவமோ கோவம். ஒரு பானை வெண்ணெயை முழுங்குனா என்ன ஆகும்?”

“வயிறு வலிக்கும்”

“ம். அதான். வயிறு வலிக்கும்ல. இந்தத் திருட்டுப்பய அம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்காம பானை வெண்ணெயை முழுங்கியிருக்கான். கண்ணனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு பயம். அடடா நாம எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறானே. இவனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு கோவம் கோவமா வருது”

“ம்”

“அம்மா அந்த கோவத்துல கண்ணனை அடிக்க வர்றாங்க. அம்மா அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடனே கண்ணனுக்கு பயம் வந்திருச்சு. உடனே அழ ஆரம்பிச்சுட்டான்”

“அப்பா”

“என்னம்மா?”

“இனிமே நான் நிறைய சாக்லேட் சாப்ட மாட்டேம்பா”

“இப்ப எதுக்கும்மா சாக்லேட் நினைவு வந்தது?”

“இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க”

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது

#படித்ததில் பிடித்தது

எங்கே சந்தோஷம்…?


அவன் மாபெரும் செல்வந்தன், சந்தோஷம் தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பார்த்தான். சந்தோஷம் தான் கிடைக்கவில்லை.

மது, மங்கையர், போதைப்பொருள் என்று எல்லாவற்றின் பின்னும் அலைந்து பார்த்தான். மனம் மகிழ்ச்சியடையவில்லை. துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும் என்று யாரோ சொல்ல அதையும் அவன் முயற்சி செய்துபார்க்க முடிவெடுத்தான்.

தனது வீட்டில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு, ”சுவாமி, இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன், இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும், மன சந்தோஷத்தையும் மட்டுமே, என்று யோகியிடம் சரணடைந்தான்.

அந்த யோகியோ அந்த செல்வந்தன் கூறியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூச வைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக் கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

செல்வந்தனிற்குப் பெரும் அதிர்ச்சி, ”அடடா, இருந்திருந்தும் ஒரு போலிச் சாமியாரிடம் போய் நமது செல்வத்தை ஏமாந்து கோட்டைவிட்டு விட்டுவிட்டோமே என்ற துக்கம் ஆத்திரமாக மாற அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.

யோகியின் ஓட்டத்திற்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க இயலவில்லை. சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி கடைசியில் தாம் புறப்பட்ட அதே மரத்தடிக்கே வந்து நின்றார்.

மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக் கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி, “என்ன பயந்துவிட்டாயா, இந்தா உன் செல்வம், நீயே வைத்துக் கொள்”, என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைபோன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத மகிழ்ச்சி. அப்போது அந்த யோகி செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார் “இங்கே வருவதற்கு முன்னால் கூட இந்த தங்கமும் வைரமும் உன்னிடத்தில் தான் இருந்தது, ஆனால் அப்போது சந்தோஷம் உன்னிடத்தில் இல்லை, இப்போது உன்னிடம் இருப்பது அதே தங்கமும் வைரமும் தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது…!’’

===================================
இதில் இருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.

சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை, மனதில் தான் இருக்கிறது. இந்த உண்மை செல்வத்தை மூட்டை கட்டிக் கொண்டு திரிந்த செல்வந்தரைப் போலவே நம்மில் பலருக்கும் கூடத்தெரிவதில்லை.

#படித்ததில் பிடித்தது

Saturday, January 28, 2012

Secret of Spiritual Success - Implicit faith


Once Krishna and Arjuna were going together along the open road.

Seeing a bird in the sky, Krishna asked Arjuna, "Is that a dove?"
Arjuna: "Yes, it is a dove."
Krishna: "Is it an eagle?'
Arjuna replied promptly, "Yes, it is an eagle."
Krishna: "No, Arjuna, it looks like a crow to Me. Is it not a crow?"
Arjuna replied, "I am sorry, it is a crow beyond doubt."

Krishna laughed and chided him for his agreeing to whatever suggestion was given.

Arjuna said, "For me, your Words are far more weighty than the evidence of my eyes; you can make it a crow, a dove or an eagle and when you say it is a crow, it must be one."

--
Implicit faith is the secret of spiritual success.

சிறந்த அறிவுரை…!


ஒரு ஞானி ஒரு அரசனிடம்,”நீ ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தால் நான் ஒரு சிறந்த அறிவுரை தருவேன்,”என்றார்.

அரசனும் பொற்காசுகளைக் கொடுக்க, ஞானிசொன்னார்,”எந்த ஒரு செயலையும், அதன் முடிவு என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் முன் செய்யாதே,”

அரசருடன் இருந்தவர்கள் அனைவரும் இந்த சாதாரண அறிவுரைக்கா ஆயிரம் பொற்காசுகள் என்று கூறி நகைத்தனர்.

அரசனோ, ”இதில் சிரிக்க ஒன்றுமில்லை. எதையும் யோசித்து செய்ய வேண்டும் என்கிறார் ஆனால் தினசரி வாழ்வில் நாம் நிறைய விசயங்ககளை அதன் விளைவு என்னவென்று யோசிக்காமல் செய்து அவதியுறுகிறோம்.  எனக்கு இந்த அறிவுரை மிகவும் பிடித்துள்ளது,” என்றார். அதனால் அரசர் பல இடங்களில் ஞானி சொன்ன வாசகங்களை எழுதி வைக்க ஏற்பாடு செய்தார்.

சில மாதங்களுக்குப்பின் ஒரு சதிகாரன் அரசனைக் கொல்லத் திட்டமிட்டான். அவன் அரச வைத்தியனுக்கு லஞ்சம் கொடுத்து அரசனுக்கு அவன் ஒரு விஷ ஊசி போட ஏற்பாடு செய்தான்.

வைத்தியனும் அரசனுக்கு விஷ ஊசியை போடப்போகும் போது அந்த அறையில் எழுதப்பட்டிருந்த ஞானியின் அறிவுரை கண்ணில்பட்டதால் அதைப் படித்தான்.

உடனே அவன் யோசனை செய்தான் ,”நான் இக்காரியத்தை செய்தால் பின் விளைவு என்னவாகும்? ரகசியம் வெளியே போகக்கூடாது என்பதற்காக சதிகாரன் என்னைக் கொல்லலாம்.”

அவனுடைய தடுமாற்றத்தைக் கவனித்த அரசன் என்னவென்று கேட்டார்.  உடனே வைத்தியன் நடந்த உண்மை அனைத்தையும் சொல்லிவிட்டான். சதிகாரன் உடனே பிடிக்கப்பட்டான்.  அரசன் உடனே முன்னால் ஞானியின் அறிவுரையைக் கேலி செய்த அனைவரையும் அழைத்து கேட்டான்,

”நீங்கள் இப்போது ஞானியின் ஆலோசனைகுறித்து கேலி செய்வீர்களா?”

#படித்ததில் பிடித்தது 

கோணல் புத்தி..!

ஒரு வேட்டைக்காரன். அவனிடம் இருந்த வேட்டை நாய் தண்ணீரின் மேல் நடக்கும்.

தன் நண்பன் ஒருவனிடம் இந்த நாயின் அபார சக்தியை காண்பிப்பதற்காக வேட்டைக்கு கூட்டிச் சென்றான்.

ஒரு குளக்கரையில் இருந்து கொண்டு அங்கே நீந்திக் கொண்டிருந்த வாத்துகளை சுட்டான்.. ஒவ்வொரு முறையும் அந்த விசித்திர நாய் தண்ணீரில் நடந்து போய் சுடப்பட்ட வாத்துகளை கவ்வி எடுத்து வந்தது.

வேட்டைக்காரன் நண்பனைப் பார்த்து “எப்படி என் நாய் ” “ஆமாம். உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே…!”

============================
நீதி: சிலருக்கு எப்பவுமே கோணல் புத்தி



#படித்ததில் பிடித்தது 

Lighting the lamp of wisdom


Once a sadhaka, who had great ambition to know something about the divine, wanted his eye of wisdom to be opened.  He entered a cave where a guru was residing.  While entering the cave he saw a small light.  As he moved forward even that little light got extinguished.  In darkness one feels frightened, and in fear, we think of God very intensively.  Thus he uttered loudly the word 'Namah S'ivaya' and on hearing this, the saint asked him who he was.  He said that he had come to seek his grace.  The great saint, who was sustaining himself in the cave only by breathing the air around him, had the competence to know the mind of his visitor.  He said that he will answer his question later but asked him first to go and light the lamp, which had been extinguished.  The visitor took a matchbox and tried to light the lamp but did not succeed.  He told the guru that he had finished all the matchsticks and yet he had not succeeded in lighting the lamp.

The guru then asked him to open the lamp, put out all the water and pour oil in it, and then try to light it.  The person did this but the lamp would not light even then.  The guru then said that the wick was probably wet with water and asked him to dry it nicely in the open and then attempt to light the lamp.  He did this and succeeded.  Then the person ventured to mention his need and sought it to the guru.  The surprised guru said that the appropriate answer was being given all the while.  The visitor pleaded that, being an ignorant man he was not able to understand the significance of the teaching and requested the guru to explain to him in clearer terms.

The guru said: "In the vessel of your heart, there is the wick of your jîva.  The wick has been immersed all these days in the water of your sensuous desire.  Therefore you are not able to light the lamp of wisdom.  Pour out all the water of desires from the vessel of your heart, and fill it with Namasmarana of God.  Take the wick of jîva and dry it in the sunshine ofvairagya; squeeze out of it all the water present in the form of desire and put into the heart the oil of devotion of Namasmarana.  It will be possible for you to light the lamp of wisdom".

#படித்ததில் பிடிதது 

ஆசை!!

முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து தனது யூஷுவலான கேள்வியைக் கேட்டார்.

“உனது பக்தியை மெச்சினேன். என்ன வரம் வேண்டும்?”

“பிரபோ !! தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்”

“நீ மாறவேயில்லை” என்று சிரித்துவிட்டு, கடவுள் , “பக்தா !! நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்க கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளி கையை அசைத்தார். அந்த மாஜிக் மரம் அங்கே. கடவுள் ஆசிர்வாதம் கலந்த ”டாட்டா” காண்பித்துக் கொண்டே மறைந்தார்.

மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது . இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்ற லைனில் சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

வரம் தரும் போது கடவுள் வார்த்தைகளில் ஒரு பிசகு செய்துவிட்டார். “அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று சொன்னாரே தவிர முனிவர் நினத்தால் என சொல்லவில்லை.

அந்த மரமும் அந்த காட்டில் யாரவது தனக்கடியில் வந்து நின்று நினைப்பார்கள் என்று காத்திருந்தது.

ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு ஒரு இளைஞன் வந்தான். ”அந்த” மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் என நினத்தான்.

படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் இத்தனை தூரம் இத்தனை ஆட்டையும் மேய்ச்சிட்டுக்கு வந்து பத்திரமா கொண்டு போய்- ச்சை !! ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை.

இந்த ராஜா ராணியெல்லாம் அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு ஒரு தடவை கிடைச்சா தேவலை” மாஜிக் மரம் தன்னுடைய முதல் அனுக்கிரஹத்தை லேட் இல்லாமல் செய்தது. அவன் கண் முன்னே ஒரு ராஜோபசார விருந்து. அவன் பயந்தே போய் விட்டான். இது ஏதோ பிசாசு வேலை என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். பயம் தெளிந்து அந்த விருந்தை ஒரு பிடி பிடித்தான்.

மீண்டும் யோசித்தான், “இப்படி வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ராஜா ராணியெல்லாம் ஒசத்தியான கட்டிலில் ஆளுக விசிறிக்கிட்டே தூங்குவாங்க; நமக்கும் அப்படி கிடைச்சா நல்லாயிருக்கும்” மரம் இந்த தடவையும் ஸ்பீடாய்…

மீண்டும் யோசித்தான், “ஆமா ! நாம நடுக்காட்ல இப்படி படுத்திருகோமே. புலி வந்து அடிச்சா ….”. மரம் வழக்கத்தை போல ஸ்பீடாய்…

===========================
ஆசை ஒன்றைத் தொடர்ந்து ஒன்று தீயாய் எறிந்து நம்மை அழித்துவிடும் என்று சொல்லி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது



#படித்ததில் பிடித்தது 

யானை Vs பன்றி

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: “நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”
====================
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். 





#படித்ததில் பிடித்தது 

பிறந்த நாள் பரிசு


மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா.
ஆடம்பரமாக விழா நடந்தது.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர்.
கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் , "ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" எனக் கேட்டார்.
"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்."

"அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!" என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

"பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

#படித்ததில் பிடித்தது