Friday, February 03, 2012

தமிழ்ச் சுருகங்கள்...

தஉபிசிதரையில் உருண்டு பிறண்டு சிரிப்பு (ROFL - Rolling On Floor and Laughing)
புதசெவிபுரியவில்லை தயவு செய்து விளக்கவும்
கககபோகருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டாய் போ
சிபசிறந்த பதில்
சிகசிறந்த கண்டுபிடிப்பு
சிகேசிறந்த கேள்வி
எபிஎழுத்துப் பிழை
இபிஇலக்கணப் பிழை
எகீஎதிர் கீச்சு 
எகொசஇ (EKSI)என்ன கொடுமை சரவணன் இது
அஇசாஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
அஆகூஅனுபவிக்கணும்! ஆராயக் கூடாது
இசெநாபாஇன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்.
இரூபோயோஇதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?
வேவேவஅவேண்டாம்…வேண்டாம்…வலிக்கிறது, அழுதுவிடுவேன்
சாநீஎபோசார் நீங்க எங்கேயோ போய்டீங்க
கெகெகெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா
ஏஇகொவெஏன் இந்த கொலை வெறி?
நுகபிநிநுண்ணரசியலை கண்டு பிரமித்து நிற்கிறேன்!
அசெஆஅடுத்தவன் செலவில் ஆப்பு
நாபிமுமூகாநான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்
சொசெசூசொந்த செலவில் சூனியம்
இமாஇரண்டாம் மாடி = டூ மச்சு!
எதஇசொஎன்ன தலைவா இப்படி சொல்லிடீங்க
எவேபொஇஎனக்கு வேற பொழப்பு இல்லே?
இஎவபோஇது என்னடா வம்பா போச்சு!
ஒசொஇ(OSI)ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!
ஒபிஉ(OPU)ஒண்ணுமே பிரியல உலகத்தில
ககைநாகணினி கை நாட்டு
எஅகவஎன் அறியாமையைக் கண்டு வருந்துகிறேன்
எஅகுஇஎங்க அப்பன் குதிருக்குள் இல்லை
பிசுகாநபிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி
தஇமதவறாக இருந்தால் மன்னிக்கவும்
தஇநபாகொதவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்
எபிமஎழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்
விவிசிவிழுந்து விழுந்து சிரிக்கின்றேன்.
எகொமேஇஎன்ன கொடுமை மேடம் இது…
முகோமுகோமுதல் கோணல் முற்றிலும் கோணல்
நநிகீநடு நிசி கீச்சு
ஒகரெமாஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!
பபிபடித்ததில் பிடித்தது
அகீஅகத்தூண்டுதலளிக்கப்பட்ட கீச்சு
வாவிசிவாய் விட்டு சிரிப்பு
இஒபொஇதெல்லாம் ஒரு பொழப்பு
டுலாடுவிட் லாங்கர்

Tuesday, January 31, 2012

பிரசாதம்

“ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்.” அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீரென்று ஓலித்தது. - “வந்துட்டான்யா வலுத்த கிழவன்!

இவன் மட்டும்தான் சாமியாக் கும்புடணுமோ? எங்கயும் இவனாலே இடைஞ்சல்தான்” என்றார் முதிய பெண்மணி ஒருவர். - அனைவரின் கவனமும் அந்தக் கிழவரின் பக்கம் திரும்பியது.

ரிஷிப வாகனம் வலம் முடிந்து இறங்கியது. தீபாராதனை ஆனதும் வாகனத்தை அலங்கரித்த மலர் பிரசாதம் பெற தள்ளுமுள்ளு! கிழவரும் பூ வாங்குவதற்கு முண்டியடித்தார்.”

"கெழவனுக்கு ஏன்யா பூவு? பொம்பளைகளை வாங்கவிடாம குறுக்கே வர்றானே!”என்றார் அந்தப்பெண்மணி. - இதைச் சட்டையே பண்ணாமல் அவர் பூவை வாங்கிய பிறகே போனார். பெண்கள் பழிப்புக் காட்டினர்.

பூவுடன் வெளியே வந்த அவர், பிராகாரத் தூண்களில் சாய்ந்தபடி, நடக்க இயலாதவர்களாய் இருந்த வயோதிகப்பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பூவைக்கொடுத்தார். பிரதோஷப் பிரசாதம் பெற்ற பூரிப்பு அவர்களின் முகத்தில், உதவிய சந்தோஷம் கிழவரிடத்தில்.

#படித்ததில் பிடித்தது

இறைவனைக் காணும் வழி


குரு ஒருவரை, அவருடைய சீடன் கேட்டான், “குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்”, என்று. அவரும், “என்னுடன் வா, காட்டுகிறேன்”, என்று கூறி, அந்த சீடனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சீடனின் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அழுத்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சீடன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

“எப்படி இருந்தது?”, என்று குரு கேட்டார்.

“என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்”, என்றான் சீடன்.

“இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்”, என்றார், குரு.

#படித்ததில் பிடித்தது

LOVE is BLIND?

There was a blind girl who hated herself just because she’s blind.

She hated everyone, except her loving boyfriend. He’s always there for her.

She said that if she could only see the world, she would marry her boyfriend.

One day, someone donated a pair of eyes to her and then she can see everything, including her boyfriend.

Her boyfriend asked her, “now that you can see the world, will you marry me?”

The girl was shocked when she saw that her boyfriend is blind too, and refused to marry him.

Her boyfriend walked away in tears, and later wrote a letter to her saying. “Just take care of my eyes dear.”

=====================
This is how human mind changes when the status changed.
Only few remember what life was before, and who’s always been there even in the most painful situations.

#படித்ததில் பிடித்தது

[Special Request] Oh God...! Make me into a Television...


A teacher from Primary School asks her students to write an essay about what they would like God to do for them…
At the end of the day while marking the essays, she read one that made her very emotional.Her husband, that had just walked in saw her crying and asked her:
- What happened? 
She answered – Read this. Its one of my students essays.
Oh God, tonight I ask you something very special: 
Make me into a television.
I want to take its place. Live like the TV in my house. Have my own special place, and have my family around ME. 
To be taken seriously when I talk….
I want to be the Center of attention and be heard without interruptions or questions. 
I want to receive the same special care that the TV receives when it is not working.
Have the company of my dad when he arrives home from work, even when he is tired. 
And I want my mom to want me when she is sad and upset, instead of ignoring me… and… I want my brothers to fight to be with me… I want to feel that family just leaves everything aside, every now and then, just to spend some time with me.
And last but not least make it that I can make them all happy and entertain them…  God I don't ask you for much… I just want to live like every TV.
At that moment the husband said:  – My God, poor kid. What horrible parents!
She looked up at him and said:  That essay is written by our son!!!

#படித்ததில் பிடித்தது

முன் பின்...!

திருமணத்திற்கு முன்
************************
“வானத்தில் நட்சத்திரங்கள் ஏன் இன்று பளிச்சென்று இல்லை?” என்று கேட்டாள் அவள்.

அருகிலிருந்த அவன் சொன்னான். “உன் கண்களின் ஒளி வெள்ளத்தில் நட்சத்திரங்கள் மங்கிப் போய் விட்டன.”

உடனே அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். முதல் நாள் சந்திப்பில் நடந்தது இது.

திருமணத்திற்குப் பின்
*************************
“வானத்தில் மிகவும் அருகே உள்ள நட்சத்திரத்தை அடைய எத்தனை தந்திக் கம்பங்கள் நடவேண்டும்” என்று அவள் அவனது கையைப் பற்றியபடி கேட்டாள்.

“மண்ணாங்கட்டி! கொஞ்சம் புத்திசாலித்தனமாகப் பேசித் தொலையேன்” கையை உதறியபடி சொன்னான் அவன்.

#படித்ததில் பிடித்தது

ஆயுதம் எதுக்கு?


போகுதென் என்கிற ஒரு சாமுராய். பெரிய வீரர். ஜென் கற்றவர். ஆனால் ஒருபோதும் தன்னுடைய திறமைகளைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமாட்டார். அமைதியான பேர்வழி.

ஒருநாள் போகுதென் படகில் சென்றுகொண்டிருந்தார். அவரோடு இன்னும் ஏழெட்டுப்பேர் அதே படகில் பயணம் செய்தார்கள்.

சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான். ’நான் பெரிய போர்வீரன். தெரியுமா?’

யாரும் பதில் சொல்லவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரேலென்று எழுத்து நின்றான். வாளை உறுவினான். சுழற்றினான். ’இங்க எவனுக்காச்சும் தைரியம் இருத்தா என்னோட ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா. பார்த்துடலாம்.’

இப்போதும் அவர்கள் வாய் திறக்கவில்லை. ஆத்திரத்தில் அவன் இன்னும் அசிங்கமாகக் கத்தினான். ஆவேசமாகக் குதித்தான்.

கடைசியாக போகுதென் பேசினார். ’தம்பி, கொஞ்சம் அமைதியா உட்காருப்பா. நீ இப்படிக் குதிக்கறதால படகு கண்டபடி ஆடுது. அது கவிழ்ந்துட்டா நம்ம எல்லாரோட உயிருக்கும் ஆபத்து.’

அவன் சட்டென்று போகுதெனைப் பிடித்துக்கொண்டான். ’உனக்கு அவ்வளவு அக்கறைன்னா நீ என்னோட சண்டைக்கு வா!’ என்று சவால் விட்டான்.

’சரி’ என்று ஒப்புக்கொண்டார் போகுதென். ’ஆனா இங்கே சண்டை போட்டா மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே!’

’அதனால?’

’அதோ, அங்கே ஆத்துக்கு நடுவில ஒரு தீவு இருக்கு. நீயும் நானும் அங்கே போய்ச் சண்டை போடலாம்.’

’சரி.’

போகுதென் துடுப்பை எடுத்துக்கொண்டார். அந்தத் தீவை நோக்கிப் படகைச் செலுத்தினார்.

சில நிமிடங்களில் படகு தீவுக்கரையைத் தொட்டது. அந்த வீரன் உருவிய வாளோடு கீழே குதித்தான்.

மறுவிநாடி போகுதென் படகை எதிர்த் திசையில் செலுத்த ஆரம்பித்தார். அந்த வம்புச்சண்டைக்காரனைத் தீவில் தனியாகப் புலம்பவிட்டுவிட்டுப் படகு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.

படகில் இருந்த மற்றவர்கள் போகுதெனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ’ஐயா, நீங்க பெரிய சாமுராயாச்சே. கத்தியை உருவி ஒரே சீவுல அவன் கதையை முடிச்சிருக்கலாமே!’

’உண்மைதான்’ என்றார் போகுதென். ’ஆனா வாளை உருவாமலே சண்டையில ஜெயிக்கலாம்ங்கறப்போ அநாவசியமா ஆயுதமெல்லாம் எதுக்கு?’

#படித்ததில் பிடித்தது

Views...


Women Friends chatting in office.  

Woman 1: I had a fine evening, how was yours?
Woman 2: It was a disaster. My husband came home, ate his dinner in three minutes and fell asleep in two minutes. How was yours?
Woman 1: Oh it was amazing! My husband came home and took me out to a romantic dinner.After dinner we walked for an hour. When we came home he lit the candles around the house and afterward talked for an hour. It was like a fairytale!

At the same time, their husbands are talking at work.

Husband 1: How was your evening?
Husband 2: Great. I went home, dinner was on the table, I ate and fell asleep. It was great! What about you?
Husband 1: It was horrible. I came home, there’s no dinner because they cut the electricity because I hadn’t paid the bill; so I had to take my wife out to dinner which was so expensive that I didn’t have money left for a cab. We had to walk home which took an hour;and when we got home remember there was no electricity so I had to light candles all over the house! After all, I was so aggravated that I couldn’t fall asleep and my wife was jabbering away for another hour!

#படித்ததில் பிடிதது

தகுதி...!


‘இந்த வேலைக்குத் தகுதியானவர் இல்லை’ என்று டெபுடி மேனேஜர் சுந்தரம் கொடுத்த கடிதத்தோடு எதிரே வந்து நின்ற கணபதியைப் பார்த்தார் எம்.டி.சுரேஷ். கடிதத்தைப் படித்தார்.

நீங்க …பாண்டியன்கிட்டே போய் வேலை பாருங்க….என்று கூறி கணபதியை பாண்டியனிடம் அனுப்பி வைத்தார் எம்.டி.

பத்து நாட்கள் ஓடிவிட்டன. போனில் தொடர்பு கொண்டார் எம்.டி.சுரேஷ்.

‘’கணபதி பியூன் வேலைக்குத் தகுதியானவர் இல்லை சார்….ஆனால் அலுவலகப் பராமரிப்பு நன்றாகப் பார்க்கிறார். அவரை அதற்குப் பயன்படுத்திக் கொண்டேன் சார்…’’ பாண்டியன் பதிலளித்தார்.

எம்.டி.சுரேஷின் அறை….எதிரே டெபுடி மேனேஜர்களான சுந்தரமும், பாண்டியனும்.

‘’தனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்க அந்த வேலைக்கு லாயக்கு இல்லைன்னு சொல்லி அனுப்பறது மேலதிகாரியோட பணி இல்லை. ஒரே கல்வித்தகுதி, சர்வீஸ் இருந்த உங்க இரண்டு பேர்ல யாருக்கு ஜி.எம்.பதவி கொடுக்கிறதுன்னு ஒரு சந்தேகம். அதுக்கான டெஸ்ட்தான் இது. பாண்டியன் ப்ளஸ் மார்க் வாங்கிவிட்டார். அடுத்த ஜி.எம். பாண்டியன்….

ஸாரி மிஸ்டர் சுந்தரம்….’’ என்றார் எம்.டி.சுரேஷ்.

#படித்ததில் பிடிதது

யாருக்காக...!


வனத்தில் ஒரு தவளைக் குடும்பம் வசித்து வந்தது.

அம்மா தவளை சந்தோஷமாகக் குதித்துச் சொன்னது, “இந்தப் பூமி இருப்பது தவளைகளுக்காக. இந்தக் காற்று இருப்பது தவளைகளுக்காக. நீர்நிலை, தாவரங்கள், புழுக்கள், பூச்சிகள் எல்லாம் இருப்பது தவளைகளுக்காக!”

குட்டித் தவளைகளும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு குதித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு அங்கே ஊர்ந்து வந்தது. லபக்லபக் என்று இரண்டு தவளைகளைப் பிடித்துத் தின்றது.

மற்ற தவளைகள் ஓடி ஒளிந்துகொள்ள, பயந்துபோன குட்டித் தவளையிடம் அம்மா சொன்னது, ‘பாம்புகள் இருப்பதும் தவளைகளுக்காகத்தான்!’

#படித்ததில் பிடிதது

குரங்கை நினைக்கக் கூடாது…!


அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கைஅதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும்என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமைமருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்றுஉண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை.கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனைசிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான்.ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்துஎப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம்தீர்வு இருப்பதாகக் கூறினான்.

அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள்கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர்.“வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா”என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழிதெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமைமருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும்புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன்திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்றுகூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக்கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன்,என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக்கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும்மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடிகொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம்முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும்தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய்தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்யவேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும்நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப்பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பிவைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான்.மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டேஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்துஅதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்குமருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக்கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்றஇயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்துமுயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும்மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றியயோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல்வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

#படித்ததில் பிடித்தது

Sunday, January 29, 2012

மனிதாபிமானாம்...!


அப்பா…யாரோ பைக்கிலே இருந்து விழுந்துட்டாங்க! நிறுத்தி பார்க்கலாம்பா…’’

‘’டேய்…பேசாம வாடா.உன்னை இண்டர்வியூவிலே விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும்’’

செழியனை இறக்கி விட்டுட்டு திரும்பும் வழியில் ஒரு திருப்பத்தில் திடீரென்று வந்த காரினால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்!

செழியனின் வயதையொத்த ஒரு வாலிபன் அவரை தூக்கி ஓரமாக உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தான்.

‘’பெரிய அடி எதுவும் இல்லை. நீ கிளம்புப்பா’ என்றார்.

‘இல்லீங்க சார்…நீங்க இங்கிருந்து கிளம்பினதும் போறேன். எனக்கு வேலை எதுவும் இலை. இண்டர்வியூவுக்குதான் போறேன்’’

‘’இந்த வேலை இல்லேன்னா இன்னொரு வேலை . பெரியவர்களுக்கு உதவணும். அதுதான் மனிதாபிமானம் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்.’’

அவருக்கு சுருக்கென்று தைத்துது. வலி இப்போதுதான் தெரிந்தது.

#படித்ததில் பிடித்தது

மலை ஏறுதல்...!


ஒரு தொழிலதிபர் ஜென் குருநாதரைப் பார்க்க வந்திருந்தார். அவர் முகத்தில் பெரும் குழப்பம்.

‘கொஞ்ச நாளாவே எனக்கு ஒரு பெரிய கவலை சாமி’ என்று அவர் பேச ஆரம்பித்தார். ‘என் பையன் ப்ளஸ் டூவிலே நல்ல மார்க் வாங்கியிருக்கான். அவனை டாக்டருக்குப் படிக்கவைக்கணும்ன்னு எனக்கு ஆசை. அதுக்காக எவ்வளவு செலவானாலும் கொடுக்கத் தயாரா இருக்கேன்!’

‘ஆனா அவனுக்கு டாக்டர் படிப்பில இஷ்டம் இல்லை. ம்யூசிக் கத்துகிட்டு சினிமாவிலே நுழையப்போறேன்னு அடம் பிடிக்கறான்!’

’உங்க மகனுக்கு எதுல ஆசையோ அந்தத் துறையில ஆர்வத்தோட ஈடுபடட்டுமே. உங்களுக்கு என்ன குழப்பம்?’

‘அதில்ல சாமி, ஒரு டாக்டர், எஞ்சினியர், வக்கீல் படிப்புன்னா வருங்காலத்தில நல்லாச் சம்பாதிக்கலாம். ம்யூசிக்கை வெச்சுகிட்டு என்ன பண்ணறது?’

குருநாதர் சிரித்தார். ‘மலை ஏறுறவங்களைப் பார்த்திருக்கீங்களா?’

‘டிவியில பார்த்திருக்கேன்!’

‘அடுத்தவாட்டி பார்க்கும்போது நல்லா கவனிங்க. அவங்கள்ல சிலர் அடிக்கடி மேலே நிமிர்ந்து பார்ப்பாங்க. இன்னும் எவ்வளவு உயரம் போகணும்ன்னு யோசிச்சுகிட்டே மலை ஏறுவாங்க’ என்றார் குருநாதர். ‘ஆனா வேற சிலர் தாங்கள் ஏறிகிட்டிருக்கிற மலைப் பகுதியைமட்டும்தான் கவனிப்பாங்க. அடுத்த அடி என்ன-ன்னு யோசிக்கமாட்டாங்க. அந்த அடியைக் கவனமா ஒழுங்கா எடுத்துவைக்கிறோமா-ங்கறதிலதான் அவஞ்களோட கவனம் இருக்கும்.’

‘இதையெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்றீங்க சாமி?’

குருநாதர் அவருக்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து பேசினார். ’மலையை அடிக்கடி நிமிர்ந்து பார்த்து இன்னும் ரொம்ப தூரம் போகணுமேன்னு மலைச்சுப்போறவங்கல்லாம் சீக்கிரத்தில களைச்சுப்போயிடுவாங்க. அடிக்கடி தப்பாக் கால் வெச்சு விபத்துக்கு ஆளாவாங்க. ஆனா அந்த அடியிலமட்டும் கவனம் செலுத்து முன்னேறுறவங்க டென்ஷனில்லாம தங்களோட பயணத்தை முடிச்சுடுவாங்க. இதில நீங்க எந்த வகை? உங்க மகன் எந்த வகை?’

#படித்ததில் பிடித்தது

உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்...!Post title


நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது.

இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார். மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

#படித்ததில் பிடித்தது

சுவை...!


ஜென் சிந்தனையாளர் ஒருவருடைய வீடு. அங்கே நான்கைந்து மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

தினந்தோறும் ராத்திரிச் சாப்பாடு முடிந்தவுடன் அவர்களுக்கு ஒரு ஸ்பூன் தேன் வழங்கப்படும். அதைக் குடித்துவிட்டுதான் கை கழுவவேண்டும்.

அன்றைக்குத் தேன் குடித்த மாணவன் ஒருவன் முகம் அஷ்டகோணலாக மாறியது. ‘த்தூ, த்தூ! ஒரே கசப்பு!’ என்றான் அவன்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு மாணவனுக்குக் கோபம். ‘உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று கத்தினான். ‘தேன் அற்புதமா இனிக்குது. அதைப்போய்க் கசப்புன்னு சொல்றியே!’

‘இல்லை. இந்தத் தேன் கசக்குது!’

‘இல்லவே இல்லை. இனிக்குது!’

அவர்கள் கைகூடக் கழுவாமல் தங்களுடைய குருநாதரிடம் ஓடினார்கள். ‘ஐயா, எங்களுக்குள்ள ஒரு சின்னச் சண்டை. நீங்கதான் தீர்த்துவைக்கணும்’ என்றார்கள்.

‘என்ன சண்டை?’

’இன்னிக்குச் சாப்பாட்டோட பரிமாறின தேன் இனிக்குதுன்னு நான் சொல்றேன். கசக்குது-ன்னு இவன் சொல்றான். எங்கள்ல யார் சொல்றது சரி?’

’ரெண்டுபேர் சொல்றதும் சரிதான்!’ என்றார் குருநாதர்.

‘அது எப்படி முடியும்? நீங்க தேனைக் குடிச்சுப் பார்க்காமலே தீர்ப்புச் சொல்றீங்களே!’

’அவனுக்குத் தேன் இனிக்கிறது. உனக்கு அது கசக்கிறது. எனக்கு அது புளிக்கலாம், அல்லது காரமாகக்கூட இருக்கலாம். அவரவர் சுவை அவரவர்க்கு’ என்று புன்னகைத்தார் குருநாதர். ‘சுவைப்பதுதான் முக்கியம். உங்கள் சுவை அடுத்தவர்களோடு ஒத்துப்போகிறதா என்பதுபற்றி யோசித்துக் கவலைப்படாதீர்கள்!’

#படித்ததில் பிடித்தது

குளிக்கும்போது குளியுங்கள்!


இரண்டு ஜென் மாணவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பிறகு தங்களுடைய குருநாதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

‘எங்க குருநாதர் பெரிய மேதை, தெரியுமா?’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு? ஆனா எங்க குருநாதர் மட்டும் அந்த நேரத்துக்குள்ள 30 மணி நேர வேலைகளைச் செஞ்சுடுவார்.’

’அப்படியா?’ ஆச்சர்யமாகக் கேட்டார் இரண்டாவது மாணவர்.

’ஆமா. அவர் தினமும் அவர் தியானம் செய்யும்போதே அன்றைய சொற்பொழிவைப்பத்தி யோசிச்சுடுவார். அப்புறமாக் குளிக்கிற நேரத்தில அன்னிக்குப் பேசவேண்டிய விஷயங்களை என்னென்ன உதாரணங்கள் சொல்லி விளக்கலாம், எப்படி எல்லோருக்கும் புரியவைக்கலாம்ன்னு யோசிச்சுக்குவார். சாப்பிடும்போது அதைத் தனக்குள்ளே பேசிப் பார்த்துப் பயிற்சி எடுத்துடுவார். அப்புறம் வகுப்பு தொடங்கினதும் அப்படியே அருவிமாதிரி தத்துவங்களைக் கொட்டுவார். கேட்கிறவங்களெல்லாம் பிரமிச்சுப் போயிடுவாங்க!’

‘ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் இரண்டாவது மாணவர். ‘எங்க குருநாதரும் பெரிய ஞானிதான். ஆனா உங்க குருநாதர் அளவுக்கு நேரத்தை வளைச்சுப் பிடிக்கிறவர் இல்லை!’

‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’

‘எங்க குருநாதர் தியானம் செய்யும்போது அதில மட்டும்தான் கவனம் செலுத்துவார். குளிக்கும்போது நல்லா அழுக்குத் தேய்ச்சுக் குளிப்பார். சாப்பிடும்போது உணவை நல்லா மென்னு ருசிச்சுச் சாப்பிடுவார். வகுப்பு நடத்தும்போது தனக்குத் தெரிஞ்சதைச் சொல்வார். அவ்வளவுதான்!’

இப்போது முதல் மாணவர் பேசினார். ‘நானும் உங்க குருநாதரிடம் சேரவேண்டுமே. உங்களோடு வரலாமா?’

#படித்ததில் பிடித்தது

அழுத்தாதே!


தத்துவப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் கையில் ஒரு சின்னப் பெட்டி.

மாணவர்களின் சத்தம் அடங்கியதும் பேராசியர் அந்தப் பெட்டியைத் திறந்தார். ஒரு பையனை அழைத்தார். ‘இது என்ன? தெரிகிறதா?’

‘மணல்!’

‘உன்னால இதைக் கையில அள்ளமுடியுமா?’

’ஓ, முடியுமே!’ அவன் கை நிறைய மணலை அள்ளிக் காண்பித்தான். மீண்டும் அதைப் பெட்டியிலேயே போட்டான்.

’இப்போ நீ இந்த மணலைக் கையில எடுத்து அழுத்திப் பிடிச்சுக்கோ’ என்றார் பேராசிரியர். ‘ஒரு சின்னத் துளிகூடக் கீழே சிந்தக்கூடாது.’

அந்த இளைஞன் முகத்தில் லேசான பதற்றம். கைப்பிடி மணலை அள்ளி எடுத்து அழுத்தினான். அது அவனது விரல்களுக்கு நடுவே வழிந்து சிதறியது. எல்லோரும் சிரித்தார்கள்.

‘கவலைப்படாதே. மறுபடி முயற்சி பண்ணு!’ என்றார் பேராசிரியர். ‘இந்தமுறை இன்னும் நல்லா அழுத்திப் பாரு’ என்று ஊக்குவித்தார்.

இளைஞன் மீண்டும் மண்ணை அள்ளினான். அதை அழுத்திப் பிடிக்க முயன்றான். அது இன்னும் வேகமாகச் சிதறியது.

இப்போது பேராசிரியர் இன்னொரு மாணவியை அழைத்தார். ‘நீ இந்த மண்ணைக் கீழே சிந்தாம கையில வெச்சிருக்கணும்ன்னா என்ன செய்வே?’

’அழுத்தாம லேசாப் பிடிச்சுக்குவேன் ப்ரொஃபஸர்’ என்றாள் அவள். ‘ஏன்னா நான் அழுத்த அழுத்த மணல் இன்னும் வேகமா வெளியே போகுது!’

‘எக்ஸாக்ட்லி’ என்று புன்னகை செய்தார் ப்ரொஃபஸர். ‘ஜென் வாழ்க்கையோட ஒரு முக்கியமான கோட்பாடு இது. நீங்க ஒரு நெகட்டிவ் விஷயத்தை நினைச்சு மேலும் மேலும் கவலைப்படறபோது உங்களையும் அறியாம அதுக்குக் கூடுதல் ஆற்றலைக் கொடுத்துடறீங்க. அது நிஜமாவே நடந்துடறதுக்கான சாத்தியங்களை அதிகப்படுத்திடறீங்க!’

’அதுக்குப் பதிலா மணலை அழுத்தாம பிடிக்கப் பழகுங்க. எதையும் ரிலாக்ஸா அணுகத் தெரிஞ்சுகிட்டோம்ன்னா எந்தக் கவலையும் பெரிய சுமையாத் தோணாது. எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் சுலபமா சந்திச்சுச் சரி பண்ணிடலாம்!’

There is another version of philosophy as well in this. More you take more you loose, if you take less sand in your hand you may not loose any. **Never be greedy**

Believe in your presence of mind and never panic!


In a shop, a man asked for 1/2 kg of butter. The salesperson, a young boy, said that only 1kg packs were available in the shop, but the man insisted on buying only 1/2 kg. So the boy went inside to the manager’s room and said “An idiot outside wants to buy only 1/2 kg of butter”.

To his surprise, the customer was standing behind him. So the boy added immediately, “And this gentleman wants to buy the other half!!!!!!”

After the customer left, the manager said “You have saved your position by being clever enough at the right time. Where do you come from?”.

To this the boy said, “I come from Mexico . The place consists of only prostitutes and football players!!!!! “

The manager replied coldly, “My wife is also from Mexico “.

To this the boy asked excitedly, “Oh yeah? Which team does she play for?”

=====================================
For "presence of mind" first requirement is presence of mind.

Source: from a forward mail

அட்டாச்மெண்ட்...


‘’ஜானகி….சங்கர்கிட்டே இருந்து போன் வந்துச்சா?’’ வீட்டிற்குள் நுழையும் போதே குரல் கொடுத்தார் இராமலிங்கம். ‘’காலையில் ஆறரை மணிக்கே போய்ச் சேர்ந்துட்டானாம்….பத்து மணிக்கெல்லாம் ஆபிஸ் போயிடுவேன்னு சொன்னாங்க?’’

அதென்னவோ ஜானகி…நம்ம பையனுக்கு ஒங்கிட்ட மட்டும்தான் அட்டாச்மெண்ட் ஜாஸ்தி…எங்கிட்ட நிமிர்ந்து கூட பேச மாட்டேங்கறான். இத்தனைக்கும் நான் ஃப்ரெண்ட்லியாதான் பழகிட்டு இருக்கேன்…’’

‘’அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க…’’ அதில்லை ஜானகி….போனவாரம் கால் வலிக்காக டாக்டர்கிட்டே போயிட்டு வந்தேன்…டெய்லி செர்ரி பழம் சாப்பிடச் சொன்னார்னு சொன்னதும் எல்லோரும் சிரிச்சீங்களே…அப்பகூட இவன் பக்கத்திலேதான் இருந்தான்.

‘ஏம்பா கால் என்னாச்சுன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலியே. அதான் வருத்தமாயிடுச்சு ஜானகி’’

இரண்டு நாட்களுக்குப் பிறகு..,

‘’சார் கூரியர்…’’

கூரியரில் வந்த பார்சலை ஆச்சரியதுதடன் பிரித்தார் இராமலிங்கம்.

‘’நம்ம ஊர்ல செர்ரி பழத்திற்காக அலைஞ்சு பார்த்தேன், கெடக்கலை. அதான் இப்ப வாங்கி அனுப்பி இருக்கேன். உடம்பை கவனமா பார்த்துக்குங்க அப்பா’’

மகனின் கடிதத்தைப் படித்து இராமலிங்கத்தால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

#படித்ததில் பிடித்தது

சுதந்தரம்

கனகா, மெலிகா என்று இரண்டு தோழிகள். ரொம்ப நாள் கழித்து மீண்டும் சந்தித்தார்கள். பல வருடக் கதைகளைப் பேசியதில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

‘ஏண்டி, இவ்ளோ நேரமாப் பேசிகிட்டிருக்கோம். நீ உன் வீட்டுக்காரரைப்பத்தி எதுவும் சொல்லலையே’ என்றாள் கனகா.

’அவருக்கென்ன? நல்லவர்தான். என்னைத் தங்கத் தட்டில வெச்சுத் தாங்கறார். ஆனா …’

மெலிகா இப்படி இழுத்ததும் கனகாவுக்குக் குறுகுறுப்பு. ‘என்னடி விஷயம்? எதுவா இருந்தாலும் என்கிட்ட தயங்காம சொல்லு’ என்று தூண்டினாள். ‘

என் புருஷன் கை நிறையச் சம்பாதிக்கறார். பேங்க் பேலன்ஸ், சொத்துக்கெல்லாம் குறைச்சலே இல்லை. ஆனா அவருக்குத் தாராள மனசுமட்டும் வரவேமாட்டேங்குது’ என்றாள் மெலிகா.

‘எவ்வளவோ பேர் நல்ல விஷயங்களுக்காக உதவி கேட்டு அவர்கிட்டே வர்றாங்க. ஆனா அவர் யாரையும் கண்டுக்காம விரட்டி விட்டுடறார். இதை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு.’

கனகா ஜென் படித்தவள். டோஜன் என்ற ஜென் குருநாதரின் போதனைகளில் இருந்து ஒரு விஷயத்தை மெலிகாவுக்குப் படித்துக் காண்பித்தாள்:

‘அங்கே ஒரு நீல மலை. பக்கத்தில் வெள்ளை மேகம். அந்த நீல மலைதான் தந்தை. வெள்ளை மேகம்தான் மகன். ஒருவரை விட்டு இன்னொருவரைப் பிரித்துப் பார்க்கமுடியாது. அப்படி ஓர் ஆழமான பிணைப்பு அவர்களுக்குள் உண்டு.’ ‘ஆனால் அதேசமயம், நீல மலையோ வெள்ளை மேகமோ அடுத்தவருக்காகத் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. மலையைச் சார்ந்து மேகம் இல்லை, மேகத்தைச் சார்ந்து மலையும் இல்லை. அவை ஒன்றோடொன்று பிணைந்திருந்தாலும் தங்கள் சுதந்தரத்தை விட்டுக்கொடுக்காமலும் வாழ்கின்றன.’

‘இதுக்கும் என்னோட பிரச்னைக்கும் என்னடி சம்பந்தம்?’ புரியாமல் கேட்டாள் மெலிகா.

‘உன் புருஷனுக்குச் சேவை மனப்பான்மை இல்லையேன்னு நீ வருத்தப்படறது நியாயம்தான் மெலிகா. ஆனா அதுக்காக நீ உன்னை மாத்திக்கவேண்டிய கட்டாயமோ அவசியமோ இல்லை. அவரோட மனைவிங்கற முறையில இல்லாட்டியும், ஒரு தனிப்பட்ட மனுஷியா உன்னால முடிஞ்சதைச் சுதந்தரமாச் செஞ்சு பழகு’ என்றாள் கனகா,

‘புருஷன் – பொண்டாட்டி, அப்பா – மகன், மாமியார் – மருமகள், வாத்தியார் – மாணவர், அரசியல்வாதி – தொண்டர்ன்னு எந்த உறவிலயும் ஒருத்தர் மத்தவரைச் சார்ந்து வாழறது தப்பில்லை.

ஆனா அது அவங்களோட சுதந்தரத்தைத் தின்னுடாம பார்த்துக்கணும். அதுதான் முக்கியம்!’

#படித்ததில் பிடித்தது

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான்


ஒரு காட்டின் எல்லையில், சாது ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் சாந்தமே உருவெடுத்தவர். அவருக்குப் பல சீடர்கள்.

ஒருநாள் அந்த குரு, தமது சீடர்களுக்கு உபதேசித்துக்கொண்டிருந்தார். அப்போது, ”எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். எனவே, எல்லாரையும் நீங்கள்வணங்க வேண்டும்” என்றார் அவர்.

ஒருநாள், அவருடைய சீடர்களில் ஒருவன் விறகுசேகரிக்கச் சென்ற இடத்தில், “எல்லாரும் ஓடிப்போங்க…மதயானை வருது!” என்று யாரோ கூவினர்.

விறகு சேகரிக்கச் சென்ற அந்தச் சீடன் அதுபற்றிகவலைப்படவில்லை. ஒருபக்கம் உயிருக்குப் பயந்து மக்கள்ஓடுகிறதையும், மற்றொரு பக்கம் யானை ஒன்று வேகமாய்வருவதையும் அவன் கண்டான். ஆனால், அவனுக்குஅங்கிருந்து ஓடத் தோன்றவில்லை.

”எதற்காக ஓட வேண்டும். நம் குருதான் எல்லா உயிர்களிலும்கடவுள் இருப்பதாய் சொல்லியிருக்கிறாரே.இந்த யானை, பிள்ளையார் சொரூபம்… நம்மை ஒன்றும்செய்யாது” என்று அவன் எண்ணிக் கொண்டான்.

யானையின் மீதிருந்த பாகன், ”ஓடு, ஓடிவிடு…” என்றுகத்தினான். சீடன் விலகினால் தானே. அவனை நெருங்கிவந்த யானை, துதிக்கையால் தூக்கி அவனை வீசியெறிந்துவிட்டது.

அவன் பெற்றோரின் புண்ணியமோ, என்னவோ, உயிருக்குஈனமில்லை. உடல் முழுவதும் காயங்களுடன் மூர்ச்சித்துக்கிடந்தான்.

செய்தியறிந்த குரு, மற்ற சீடர்களுடன் அங்கே வந்தார்.அவனை ஆசிரமத்திற்கு தூக்கிச் சென்று சிகிச்சையளித்தார்.சிறிது நேரத்தில் அவன் மூர்ச்சை தெளிந்து, எழுந்தான்.

அப்போது சீடர்களுள் ஒருவன் அவனிடம், ”மதயானைவருகிறதென்று எல்லாரும் ஓட்டம் பிடித்தனர். நீ மட்டும் ஏன்ஓடவில்லை?” என்று கேட்டான்.

அதற்கு சீடன், ”எல்லா உயிர்களிலும் பகவான் இருப்பதாக நம்குரு சொல்லியிருக்கிறாரே. அதனால் நமக்கு ஒண்ணும் ஆகாதுஎன்று எண்ணிக் கொண்டு விட்டேன்!” என்றான்.

குரு சிரித்தார். ”முட்டாளே! எல்லா உயிர்களிலும் இறைவன்இருப்பது உண்மைதான். அவர் யானைக்குள்ளும் இருக்கிறார். யானைப் பாகனுக்குள்ளும் இருக்கிறார்.

"ஓடு என்று பாகன் உன்னை எச்சரித்தது, கடவுள் கொடுத்தஎச்சரிக்கை அல்லவா. நீ கடவுள் பேச்சைக் கேட்டிருந்தால்கஷ்டம் வந்திருக்காது!” என்றார்.

ஆத்திகன், நாத்திகன், அறிவாளி, முட்டாள், நல்லவன்,கெட்டவன் என்று எல்லாருக்குள்ளும் இறைவன் இருப்பதுஉண்மைதான். ஆனால், தனக்குள் இறைவன் இருப்பதைகெட்டவன் உணர்வதில்லை.

இறையுணர்வு இல்லாத காரணத்தால் அவன், மற்றவர்களுக்குத்தீங்கு செய்வான் என்பதை தற்போது உணர்ந்து கொண்டான்சீடன்.

#படித்ததில் பிடித்தது

கரப்பான் பூச்சி....

உலகிலேயே வேகமாக ஓடும் பூச்சி கரப்பான் பூச்சி. இவை இறக்கைகள் பெற்றிருந்தாலும் பறப்பது ஒரு சில சமயங்களில் மட்டுமே.

கரப்பான் பூச்சி வாசனை உணர்வை அறிந்துக் கொள்வதில் நிகரற்றவை. தூரத்தில் இருந்தபடியே வெகு தொலைவில் உள்ள பொருட்களைக் கூட வாசனை நுகர்ந்து அறிந்து கொள்கின்றன. கரப்பான் பூச்சி கால்பட்ட இடமெல்லாம் துர்நாற்ற மடிக்கும்.

ஒரு கரப்பான் பூச்சியின் தலையை, அதன் உடலில் இருந்து மிகச் சரியாக அறுத்து அகற்றிவிட்டால் ஏழு மணி நேரம் தலையில்லாமலே அது உயிர் வாழும்.

#படித்ததில் பிடித்தது

தீம் பார்க்....

தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான். 


அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை. மேல போகும்போது ஜயண்ட் வீல்லே தலை சுத்தும், வயித்தைப் புரட்டும்’ என்று தடுத்தாள்!
ஆனால் சேகருடைய பிடிவாதமே வென்றது. ஆயிரம் பத்திரம் சொல்லி அம்மா சேகரை அப்பாவுடன் அரை மனதுடன் அனுப்பி வைத்தாள்.
ஜயண்ட் வீலில் ஏறி உட்கார்ந்ததும் சேகர் அம்மாவுக்குக் கை ஆட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக வீல் சுற்றவும் சேகர் மேலே மேலே சென்றான்.

‘அய்யோ! பயமா இருக்கே! இறக்கி விடறீங்களா’’ என்ற குரல் பயங்கரமாய்க் கேட்டது.
முழு சுற்றும் முடிந்த பின்னரே ஜயண்ட் வீல் நின்றது. ‘தள்ளுங்க! தள்ளுங்க! காத்து வரட்டும். முதல்ல தண்ணி கொடுங்க’ என்ற வார்த்தைப் பரிமாறல்கள்.

அம்மா நடுவில் படுத்திருந்தாள்.....
ஏதும் அறியாதவராய் சேகரும் அப்பாவும் கூட்டத்தில் நுழைந்தார்கள்.

#படித்ததில் பிடித்தது


அம்மா அதிகம் சாப்பிடுவாள்…!

சுடச் சுட உணவு இருந்தால் - தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பறிமாறினால் - அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக் கொண்டு உணவு ஊட்டினால் - தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் - தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே - அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

#படித்ததில் பிடித்தது


Every one must have faith in themselves...


There is no one who does not love themselves, has no belief in themselves and has no ambition to rise higher and higher.  Even a man who does not have faith in God has faith in himself and desires to have strength by which to cultivate faith in himself.

There was once a guru communicating wisdom to people who came for his darshan with flowers and fruits.  One day, as the offerings were plenty, he called a disciple and asked him to cut the fruits and arrange for its distribution as prasâda(m).  The disciple reported to the guru that all was ready for distribution and asked him who would be given first.  The guru asked him to start with the person in whom he has the greatest faith and the highest confidence.  All the people assembled there thought that the disciple would first give the fruit to the teacher and then distribute to the others.  But the disciple did not do so.  He took the first fruit himself.  When the surprised onlookers asked for an explanation he said that since he had had the greatest confidence and affection for himself, he took the first fruit.

=============================
On a lighter sense, if you watch most of  cooks/chefs will taste their dish by themselves, before serving to others...

வாஸ்து....

ரகு, உன் புது வீடு ரொம்ப நல்லா இருக்கே.

ஆமாம். என் வீட்டை பார்த்து பார்த்து வாஸ்துபடி கட்டியிருக்கேன். தென் கிழக்கிலே சமையல் கூடம், தென்மேற்கிலே படுக்கை அறை, வட கிழக்கிலே பூஜை அறை.

அப்படியா இது என்ன புது வீட்டிலே பல்லி, இரண்டு, மூணு கரப்பான்பூச்சி, மீன் தொட்டி, வாசலிலே நாய்?

இது கூட வாஸ்துபடி இருக்கட்டும்னு வைச்சிருக்கேன். பல்லி இருந்தா பூச்சியை சாப்பிட்டுட்டு வியாதி பரவாம தடுக்கும் கரப்பான் இருந்தா செல்வம் சேரும். மீன் தொட்டி வீட்டிலே இருந்தா நல்ல உயிரோட்டம் இருக்கும். நாய் இருந்தா திருட்டு பயம் இல்லாம இருக்கும்.,

இதெல்லாம் சரி உங்கம்மா எங்கே?

அவங்க கிராமத்திலே இருக்காங்க.

ஏம்பா, அம்மாவை வீட்டிலே தங்க வைச்சு நல்லபடியா கவனித்து கொண்டால் வாஸ்துபடி புண்ணியம் கிடைக்கும்ன்னு யாரும் உனக்கு சொல்லவில்லையா?

என்று கேட்கும்போது ரகு குற்ற உணர்வு மேலிட தலை குனிந்து கொள்கிறான்.

#படித்ததில் பிடித்தது

அறிவுரை...


அப்பா அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா”“இப்பத் தானே அம்மா ஒரு கதை புத்தகத்தைப் படிச்சுக் காமிச்சாங்க. அப்பாவுக்குத் தூக்கம் வருது. தூங்கணும்”

“அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா. ஒரே ஒரு கதை அப்பா”

“இல்லைம்மா. அப்பா பாட்டு பாடறேன். சீக்கிரம் தூங்கு. காலையில எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்”

“ஒரே ஒரு கதைப்பா. ஒன்னே ஒன்னு. ப்ளீஸ். ப்ளீஸ்”

“உழந்தாள் நறுநெய்…”

“ம்ம்ம். கதை வேணும்பா”

“ஓரோ தடா உண்ண…”

“ம். சரி. பாடுங்க”

“உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ணஇழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்முழந்தாள் இருந்தவா காணீரேமுகில் முலையீர் வந்து காணீரே“

“தூங்கிட்டியா அம்மா?”

“தூக்கம் வர்றமாதிரி இருக்கு. ஆனா இன்னும் தூங்கலை”

“சரி. கதை சொல்லவா?”

“கதையா! ம்.ம். சொல்லுங்கப்பா. சொல்லுங்க”

“எந்தக் கதை வேணும்?”

“ம்.ம். கண்ணன் கதை. கண்ணன் கதை”

“ம். அப்பாவும் அதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரி. கண்ணனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்?”

“வெண்ணெய். வெண்ணெய்”

“ஆமாம். வெண்ணெய் தான். ஒரு தடவை அவங்கம்மா..”

“யசோதாவா? தேவகியா?”

“யசோதாம்மா தான். அவங்க ஒரு தடவை ரொம்ப நேரம் வேலை பார்த்து ஒரு பானை நிறைய வெண்ணெய் சேர்த்து வச்சாங்களாம்”

“எம்புட்டு பெரிய பானைப்பா?”

“நம்ம வீட்டுல இட்லி மாவு வப்போமே. அது மாதிரி பெரிய பானை”

“இட்லி மாவு பானையில இருக்காதே. பாத்திரத்துல தானே இருக்கும்”

“ஹிஹி ஆமாம். அந்த மாதிரி பெரிய பானைன்னு சொல்றேன்”

“அப்ப சரி”

“அம்மா அந்தப் பக்கம் போனவுடனே இந்தக் கண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா?”

“தெரியும் தெரியும். அந்தப் பானையில இருக்குற வெண்ணெயை எல்லாம் தின்னுட்டான்”

“உனக்கும் குடுத்தானா என்ன?”

“இல்லை. எனக்குக் குடுக்கலை”

“அப்ப எப்படி உனக்குத் தெரியும்?”

“அப்பா தான் சொன்னீங்க. இன்னொரு கதை சொல்றப்ப”

“ம்.  . ஆமாம். அந்தப் பானையில இருக்குற எல்லா வெண்ணெயையும் அவன் வழிச்சு சாப்டான். கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. அம்மாவுக்கோ கோவமோ கோவம். ஒரு பானை வெண்ணெயை முழுங்குனா என்ன ஆகும்?”

“வயிறு வலிக்கும்”

“ம். அதான். வயிறு வலிக்கும்ல. இந்தத் திருட்டுப்பய அம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்காம பானை வெண்ணெயை முழுங்கியிருக்கான். கண்ணனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு பயம். அடடா நாம எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறானே. இவனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு கோவம் கோவமா வருது”

“ம்”

“அம்மா அந்த கோவத்துல கண்ணனை அடிக்க வர்றாங்க. அம்மா அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடனே கண்ணனுக்கு பயம் வந்திருச்சு. உடனே அழ ஆரம்பிச்சுட்டான்”

“அப்பா”

“என்னம்மா?”

“இனிமே நான் நிறைய சாக்லேட் சாப்ட மாட்டேம்பா”

“இப்ப எதுக்கும்மா சாக்லேட் நினைவு வந்தது?”

“இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க”

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது

#படித்ததில் பிடித்தது

எங்கே சந்தோஷம்…?


அவன் மாபெரும் செல்வந்தன், சந்தோஷம் தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பார்த்தான். சந்தோஷம் தான் கிடைக்கவில்லை.

மது, மங்கையர், போதைப்பொருள் என்று எல்லாவற்றின் பின்னும் அலைந்து பார்த்தான். மனம் மகிழ்ச்சியடையவில்லை. துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும் என்று யாரோ சொல்ல அதையும் அவன் முயற்சி செய்துபார்க்க முடிவெடுத்தான்.

தனது வீட்டில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு, ”சுவாமி, இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன், இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும், மன சந்தோஷத்தையும் மட்டுமே, என்று யோகியிடம் சரணடைந்தான்.

அந்த யோகியோ அந்த செல்வந்தன் கூறியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூச வைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக் கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

செல்வந்தனிற்குப் பெரும் அதிர்ச்சி, ”அடடா, இருந்திருந்தும் ஒரு போலிச் சாமியாரிடம் போய் நமது செல்வத்தை ஏமாந்து கோட்டைவிட்டு விட்டுவிட்டோமே என்ற துக்கம் ஆத்திரமாக மாற அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.

யோகியின் ஓட்டத்திற்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க இயலவில்லை. சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி கடைசியில் தாம் புறப்பட்ட அதே மரத்தடிக்கே வந்து நின்றார்.

மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக் கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி, “என்ன பயந்துவிட்டாயா, இந்தா உன் செல்வம், நீயே வைத்துக் கொள்”, என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைபோன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத மகிழ்ச்சி. அப்போது அந்த யோகி செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார் “இங்கே வருவதற்கு முன்னால் கூட இந்த தங்கமும் வைரமும் உன்னிடத்தில் தான் இருந்தது, ஆனால் அப்போது சந்தோஷம் உன்னிடத்தில் இல்லை, இப்போது உன்னிடம் இருப்பது அதே தங்கமும் வைரமும் தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது…!’’

===================================
இதில் இருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.

சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை, மனதில் தான் இருக்கிறது. இந்த உண்மை செல்வத்தை மூட்டை கட்டிக் கொண்டு திரிந்த செல்வந்தரைப் போலவே நம்மில் பலருக்கும் கூடத்தெரிவதில்லை.

#படித்ததில் பிடித்தது

மெதுவா…! [Adults only]


இரவு நேரம்…. தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது…

கல்யாணமாகி இருபது வருடம் ஆகிவிட்டது.  வியப்புடன் அருகில் படுத்திருந்த மனைவியை பார்த்தான்.  அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.

திடீரென்று அவனுடைய கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாக தடவியது.  என்ன ஆச்சர்யம் அவள் கண்களை திறக்கவில்லை.

அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது.  அவளுடைய இதயம் சிலிர்த்தது.  இருந்தாலும் கண்ணை திறக்கவில்லை.

அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை.  இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்கு கீழே ஒரு கணம் தயங்கியது.  அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.

மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் படபடத்தன.  அந்த நொடியில் தீடீரென்று டி.வி. உயிர் பெற்றது.  உலக தொலைக்காட்சிகளில்  முதல் முதலாக…

என்னங்க.. என்ன ஆச்சு?

ரிமோட் கிடைச்சிடுச்சி…!

#படித்ததில் பிடித்தது 

ஆரோக்கிய கனி நெல்லிக்கனி!!

ஆரோக்கிய “சி’ வைட்டமின் மிகுதியாக உள்ள கனி நெல்லிக்கனி. ஐந்துகிலோ ஆரஞ்சுப்பழத்தில் உள்ள “சி’வைட்டமின் அளவு ஒரு கிலோ நெல்லிக்கனியில் இருக்கும். உடல் அணுக்களைப் பாதுகாப்பதில் இந்தக் கனி மிகச் சிறந்த காரணியாக விளங்குகின்றது. இதனை பச்சையாக உண்பதால், ஈறுகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் எளிதில் நீங்கி விடும். உடலில் உண்டாகும் அதிக சூட்டைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்கும் ஓர் அரிய மருந்து. மேலும் கர்ப்பப்பை கோளாறுகளையும் இது போக்குகிறது.


#படித்ததில் பிடித்தது