Showing posts with label #படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label #படித்ததில் பிடித்தது. Show all posts

Monday, May 07, 2012

அறியாமை...


ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு மனித உறுப்புகளைப் 
பற்றி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“மனிதர்களுக்கு இரண்டு கால்கள்” ஆசிரியர் சொன்னார்.
மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“மனிதர்களுக்கு இரண்டு கைகள்” ஆசிரியர் சொன்னார்.
சட்டென்று ஒரு மாணவன் இடை மரித்தான்.”எனது
தந்தைக்கு மூன்று கைகள்….”

ஆசிரியர் திகைத்தார்.

“அதெப்படி…?” என்று ஆசிரியர் கேட்டார்.

“வலது கை…” வலது கையைக் காட்டி மாணவன்
சொன்னான்....”இடது கை”என்று அந்த மாணவன் இடது
கையையும் காட்டினான்.

ஆசிரியர் அவசரமாக கேட்டார் ”எங்கே மூன்றாவது கை…?”

மாணவன் நிதானமாக சொன்னான் “வழுக்கை……….???”

கை என்றால் என்னதென்று ஆசிரியர் சொல்ல, அந்த
மாணவனோ கை என்பதற்கு வேறு விதத்தில் அர்த்தம்
கற்பித்துக் கொண்டிருந்தான்.

இதைப் போலத்தான் பலர் பல விஷயத்துக்கு
அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…!


#படித்ததில் பிடித்தது

Saturday, April 07, 2012

சபதம்

முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,”இந்த ஆண்டு நான்
குடிக்க மாட்டேன்,”என்று சபதம் செய்தார்.
 
அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது. அவர் கடையைத்
திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க
மகிழ்ச்சி.
 
”முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக
முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது
அருந்தலாம்.”என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய்
மது அருந்தினார்.

நீங்கள் நால்வருமா இரட்டை சகோதரர்கள்?

முல்லா ஒரு முறை தன சகோதரனின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்கு
சென்று, நன்கு சாப்பிட்டு மகிழ்வுடன் சகோதரனுடன் அரட்டை அடித்துக்
கொண்டிருந்தார். இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள்.
 
அப்போது எதிரில் ஒரு மனிதன் நன்கு குடித்து விட்டு இவர்களையே அதிசயமாகக்
கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
முல்லா அவனிடம் சொன்னார், ”நீ குடித்ததனால் தான் நாங்கள் இருவராகத் தெரிகிறோம்
என்று எண்ணாதே. நாங்கள் ஒரே மாதிரி இருக்கும் சகோதரர்கள்.”
 
அதற்கு அந்தக் குடிகாரன் மீண்டும் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களைப்
பார்த்துக் கொண்டே கேட்டான், ”நீங்கள் நால்வருமா?”

தேவையற்ற கேள்விகள்

ஒரு சமயம் முல்லாவிடம் கல்வி கற்க வந்த மாணவன்
ஒருவன் முல்லாவைப் பார்த்து, ”ஆசிரியரே! ஒருவன்
முழு உலகையும் வெற்றி கொள்கிறான். மற்றொருவன்,
உலகம் முழுதையும் வெற்றி கொள்ளும் வலிமை
இருந்தும், அவ்வாறு செய்யால் இருக்கிறான். வேறொருவனோ,
உலகம் முழுவதையும் வெல்ல விரும்பும் ஒருவனைத்
தடுத்து, தான் வெற்றி அடைகிறான். இந்த மூவருடைய
செயல்களில் எது மிகவும் கஷ்டமான காரியம்?” என்று
கேட்டான்.

உடனே முல்லா, சீடனைப் பார்த்து, ”சீடனே, நீ கேட்ட
கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஆனால்
இம்மூன்று செயல்களைவிட கஷ்டமான வேறொரு
செயல் உள்ளது. அதைப்பற்றி நான் நன்கு அறிவேன்
என்று சொன்னார்.

”என்ன செயல் அது?” என்று அந்த சீடன் முல்லாவைப்
பார்த்து வியப்புடன் கேட்டான்.

முல்லா, ”தேவையில்லாத கேள்விகளைத் தானாக
ஏற்படுத்திக் கேட்கும் சீடனுக்கு கல்வி கற்பித்துத்
தெளிவை உண்டாக்குவதுதான் அந்தக் கஷ்டமான
காரியம்” என்று சொன்னார்.

வாயை மூடு – முல்லா கதை


முதன் முறையாக தலைநகருக்குத் திரும்பிய முல்லாவை
ஊர்மக்கள் சூழ்ந்துகொண்டு ”அரண்மனைக்குச் சென்றீர்களா,
அரசரைப் பார்த்தீரகளா? அரசரோடு பேசினீர்களா?” இவ்வாறு
ஆளுக்கொரு கேள்வியாக கேட்டார்கள்.

‘அரண்மனைக்குப் போனேன். அதில் எந்தவித கஷ்டமும்
இல்லை. மன்னரைப் பார்த்தேன் அவருடன் பேசினேன்.
என்னைப் பற்றியும் நமது ஊரைப்பற்றிய விபரங்களையும்
எடுத்துக் கூறினேன். மன்னர் மற்றவர்கள் பேசும்போது
வெறுமனே கேட்டார். அல்லது தலையை ஆட்டினார்.
ஆனால், நான் பேசியபோதோ, மன்னர் வாயைத் திறந்து
பேசினார்”

இவ்வாறு ஊர்மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
முல்லா பதில் கூறினார்.

இதைக்கேட்ட மக்கள் வியப்பால் ஆரவாரம் செய்தனர்.

ஆரவாரம் அடங்கியதும், கூட்டத்தினரில் ஒருவன்,
”முல்லா, உங்களுடன் அரசர் என்ன பேசினார்?” என்று
கேட்டான்.

அதைக்கேட்ட முல்லா, சூழ்ந்து நின்றவர்களை ஒருமுறை
பெருமையுடன் பார்த்துவிட்டு, ”மன்னர் என்ன கூறினார்
தெரியுமா? ‘வாயை மூடு’ என்று கூறினார்” என்று சொன்னார்.

தவறு எது தெரியுமா?

ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருந்தார் முல்லா.
அப்போது அங்கு கிடந்த குப்பையின் மத்தியில் ஏதோ
மின்னுவதைக் கண்டு அதை ஆர்வமாய் எடுத்துப் பார்த்தார்.
அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் உடைந்த துண்டு.

முல்லா அதில் தன் முகத்தைப் பார்த்தபோது, அருடைய
உருவம் அதில் விகாரமாய்த் தெரிந்தது. ”சே! இந்த
கண்ணாடி முகத்தை விகாரமாகக் காட்டுவதால்தான்
இதைக் குப்பையில் போட்டுவிட்டார்கள் போல” என்று
முல்லா கூறினார்.

இதைக்கேட்ட ஒருவன், ”ஏன், கண்ணாடியை குறை
கூறுகிறீர்கள்? கண்ணாடி விகார முகத்தைக் காட்டுகிறது
என்று சொல்கிறீர்களே… தவறு யாருடையது?” என்று
கேட்டான்.

”தவறு என்னுடையதுதான்” என்று கூறிய முல்லா,
கண்ணாடியைக் குப்பையில் வீசிவிட்டு, ”என்னுடைய
தவறு என்ன தெரியுமா? இக்கண்ணாடியைக்
குப்பையிலிருந்து எடுத்துப் பார்த்ததுதான்” என்று சொன்னார்.

Saturday, March 10, 2012

மரணம் என்பது இயற்கை...


ஒரு முறை சுஜாதை என்ற பெண்மணி தன் இறந்த மகனை எடுத்துக் கொண்டு, புத்தரிடம் வந்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லி தன் ஒரே மகனை பிழைக்க வைக்கச் சொல்லி கேட்டாள்.

‘சரி செய்கிறேன் ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்' என்றார் புத்தர். ‘சரி சொல்லுங்கள்’ என்றால் சுஜாதை.

‘சரி அம்மா, இந்த ஊரில் யார் விட்டில் துக்கம் இதுவரை நடக்கவில்லையோ அவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது உப்பு வாங்கிவா, உன் மகனை பிழைக்க வைத்துவிடுகிறேன்’ என்றார்.

இது எளிதான வேலை என்று நினைத்தவள் இறந்த மகனை அங்கேயே விட்டுவிட்டு, வீடுவீடாக சென்று விசாரித்தாள், ஒவ்வொரு வீட்டிலும் எதோ ஒரு விதத்தில் துக்கம் நடந்ததைச் சொல்லி கையை விரித்தார்கள். மாலை வரை ஒவ்வொரு வீடாக சென்றவளுக்கு இறுதியில் மரணம் என்பது இயற்கை என்று தெரிந்தது.

பின்பு புத்தரை வணங்கி, தாம் மரணத்தை உணர்ந்து கொண்டதாக சொன்னாள். பின்பு ஒரு நாள் பெளத்த துறவியானாள். மரணம் என்பது இயற்கை அது வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரையாக சொல்லாமல் அவளாகவே புரிந்து கொள்ள வைத்தார் புத்தர்.

#படித்ததில் பிடித்தது

வேலை...

அழுக்கேறிய பேண்ட், கிழிந்த சட்டை, பரட்டைத் தலை, நீண்ட தாடி என்று பார்க்கவே அருவருப்பாக இருந்தவனை காரில் உட்கார்ந்தபடியே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மனோகர்.

காரின் அருகில் வந்து நின்றவனுக்கு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவனுக்கு கொடுக்கும்படி தன் டிரைவரிடம் கொடுத்தான்.

டிரைவர் கொடுத்த ரூபாய் நோட்டை வாங்கியவன் அதில் சில வாசகங்கள் எழுதி டிரைவரிடம் திருப்பிக் கொடுத்தான்.  ஆச்சரியத்துடன் வாங்கிய டிரைவர் அதை மனோகரிடம் கொடுத்தான்.

அதில், “நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பட்டதாரி. எனக்கொரு வேலை தாருங்கள்’ என்று எழுதியிருந்ததைப் படித்த மனோகர் கனத்த மனதோடு தன் விசிட்டிங் கார்டை கொடுத்து ஆபிசில் வந்து பார்க்கும்படி கூறினார்.

பைத்தியக்காரனுக்கு வேலை கொடுக்கப் போகும் முதலாளியை நினைத்து சிரித்தான் டிரைவர். தாடிக்கார தமிழ்ப் பட்டதாரியும், தன் முதலாளியும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதை அறியாமல்!

#படித்ததில் பிடித்தது

Heaven and Hell

A holy man was having a conversation with the Lord one day and said, “Lord, I would like to know what Heaven and Hell are like.-”The Lord led the holy man to two doors. He opened one of the doors and the holy man looked in.In the middle of the room was a large round table.-In the middle of the table was a large pot of stew which smelled delicious and made the holy man’s mouth water.-But the people sitting around the table were thin and sickly. They appeared to be famished. They were holding spoons with very long handles that were strapped to their arms and each found it possible to reach into the pot of stew and take a spoonful, but because the handle was longer than their arms, they could not get the spoons back into
their mouths.

The holy man shuddered at the sight of their misery and suffering. The Lord said, ‘You have seen Hell.

They then went to the next room and opened the door.  It was exactly the same as the first one. There was
the large round table with the large pot of stew which made the holy man’s mouth water. The people were
equipped with the same long-handled spoons, but here the people were well nourished and plump, laughing and talking.

The holy man said, “I don’t understand.

It is simple” said the Lord, “In this place the people have learned to feed one another.

#படித்ததில் பிடித்தது

20 - 20 - 20

கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு, எரிச்சல், சோர்வு, தலைவலி, பார்வைக் கோளாறு…
இவையெல்லாம் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அறிகுறிகள்.

நிலத்தில் பாடுபடும் விவசாயி கூட நிலத்தைவிட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம். ஆனால் கம்ப்யூட்டரை
நாம் விடவே முடியாது போலிருக்கிறது.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதை விட மோசமானது, கண்களைக் கெடுத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது.
கண்ணும் கெடாமல், கம்ப்யூட்டரையும் விடாமல் இருக்க என்ன செய்வது?

*  மானிட்டரை உங்கள் முகத்திலிருந்து 20 அங்குல தூரத்துக்கு அப்பால் வையுங்கள். மானிட்டர் 20 டிகிரி சாய்வாக இருக்கட்டும்.

*   ஜன்னல் பக்கத்தில் மானிட்டர் இருந்தால் வெளி வெளிச்சமும், கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சமும் கண்களைக் கூச வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

*   கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடும்.
எனவே அவ்வப்போது கண்களை மூடித் திறங்கள்.

*  20 – 20 – 20 விதியைக் கடைப்பிடியுங்கள். அதாவது:
20 அங்குல தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும்.

20 நிமிடத்துக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்காமல்
20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

*  எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாஸ்ட் ஃபுட்டை ஒரு பிடி பிடிக்காமல், கண்களுக்கு வளம் சேர்க்கும் உணவு வகைகளைச்
சாப்பிடுங்கள்.

#படித்ததில் பிடித்தது

இலக்குதான் முக்கியம்

குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு.

”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன்.

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

“அமெரிக்காவில் பரபரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து.  சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்ஸி ஓட்டுநர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை. இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு
திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்து விட்டது. இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின.தவறு எதிரில் வந்தவனுடையதுதான். இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்ஸி ஒட்டுநரைத் திட்டினான். ஆனால் ஆச்சரியம்! பதிலுக்கு டாக்ஸி ஓட்டுநர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம். அதிலும் டாக்ஸி ஓட்டுநர் பொறுமை இழக்கவில்லை. ஆத்திரப்படவில்லை. நிதானமாய் இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு. இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுநரிடம் கேட்டார்.

“எப்படி இவ்வளவு பொறுமையாய், யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்?” அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுநர், “ என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பது. வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும் குப்பைகளையெல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்வதில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு பதில் சொல்லிக் கொண் டிருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது.’’

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
இலக்குதான் முக்கியம், இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல..

#படித்ததில் பிடித்தது

கிணற்றுத்தவளை..!

ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது…இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன…

ஒரு நாள் புது தவளை ‘இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது’ என்றது.

‘நீ எங்கே வாழ்கிறாய்?’ என் கிணற்றுத்தவளை
கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே ….’நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்’ என்றது.

‘உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?’ என்றது கிணற்றுத்தவளை…

அதற்கு புதிய தவளை ..’உன் கிணற்றை அளந்து விடலாம்…சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது’என்றது.

‘நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன். உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து’என்றது கிணற்றுத்தவளை. மேலும்..’பொய்யர்களுக்கு இங்கு
இடமில்ல.நீ போகலாம்’என கடல் தவளையை
விரட்டியடித்தது.

உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி…நம் அறிவை வளர்த்துக்கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

#படித்ததில்பிடித்தது

PS: நம்மில் பலர் (நானும்தான்) இப்படி கிண்ற்று தவளையாகத்தான் இருக்கிறோம்...

Three Questions

The thought came to a king that he would never fail if he knew three things. These three things were:
* What is the best time to do each thing?
* Who are the most important people to work with?
* What is the most important thing to do at all times?

Many educated men attempted to answer the king’s questions, but they all came up with different answers. 

The king decided that he needed to ask a wise hermit in a nearby village. The hermit would only see common folk, however, so the king disguised himself as a peasant and left his guards behind to see the hermit.

The hermit was digging flower beds when the king arrived. The king asked his questions, but the hermit went on digging rather laboriously. 

The king offered to dig for him for a while. After digging for some time, the king again asked his questions.

Before the hermit could answer, a man emerged from the woods. He was bleeding from a terrible stomach wound. 
The king tended to him, and they stayed the night in the hermit’s hut. 

By the next day the wounded man was doing better, but was incredulous at the help he had received. 

The man confessed that he knew who the king was, and that the king had executed his brother and seized his property. 

He had come to kill the king, but the guards wounded him in the stomach. 
The man pledged allegiance to the king, and he went on his way. 

The king asked the hermit again for his answers, and the hermit responded that he had just had his questions answered.
* The most important time is now. The present is the only time over which we have power.
* The most important person is whoever you are with.
* The most important thing is to do good to the person you are with.

#படித்ததில் பிடித்தது

பேச்சில் சாமர்த்தியம்...

தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.

அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள்.

ஒவ்வொரு இடத்தையும் வெகுவாய் ரசித்தாள் மனைவி. கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள்.

வீடு திரும்பும்போது விமானத்தில் அவன் மனைவி அவனிடத்தில், ‘இவ்வளவு பார்த்தோமே இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?’ என்று கேட்டாள்.

அவனுக்கு நிறைய விஷயங்கள் தோன்றின. அவன் பார்த்த அழகழான கட்டடங்கள், அருவிகள், இயற்கை காட்சிகள்
என்று பல காட்சிகள் அவன் மனதில் ஓடின.

அவன் அவற்றையெல்லாம் சொல்லவில்லை. அவன் தந்த பதிலில் மனைவி சொக்கிப் போனாள். அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

”இவ்வனைத்திலும் எனக்குப்பிடிச்சது நீதான்..!”

நீதி: பேச்சில் சாமர்த்தியம் வேண்டும்

#படித்ததில் பிடித்தது

What is GUTS...?

This a true incident which happened few years back in a school.

There was a staff who was a very practical man, and encouraged students to do what their hearts want, he wanted them to be Practical and use their presence on mind rather than break their heads on books.

He handled “Moral Science” or “value Education” classes for students. It was time for exams, the HALF YEARLY
exam was around the corner and he had to set a question paper for his students.

Though he knew his students were very studious, he just wanted to test their presence of mind, so he made the Moral science question paper with just one question in the paper for 50 marks.

“WHAT IS GUTS?” During the exam he visited the exam hall and all the students were thinking hard on how to answer this question and few of them even raised a question saying that it is out of portion, but few nerds wrote 10 pages and 20 pages essays stating whats GUTS, few wrote about the “BADMINTON RACKET” and few about the “biological GUT”.

Finally the results were out and for surprise none of the student who wrote pages of essay crossed 20 marks, most of them failed, but one guy got 50/50.

Guess what he wrote on his paper. He wrote his name and class on the first sheet, and left 5 BLANK SHEETS and in
the last sheet he wrote “THIS IS WHAT IS CALLED GUTS"

I know few may take it as “look at the small boy’s attitude and the way he’s brought up” but the fact is he used his
presence of mind at that point rather than the history and crap he learn’t from books.

In real life too its the same situation, your brain is not a hard disk to collect all the data and retrieve it later, so presence of mind is really important.

But then you can’t expect your project manager to be like this teacher :D

#From a forward mail

சந்தேகம்....

நமக்குத் தெரிஞ்ச பேராசிரியர் ஒருத்தர், ஒரு மணிநேரம் ரொம்பவும் விவரமா வகுப்பு எடுத்தார்…கடைசியா சொன்னார்.

மாணவர்களே…ரொம்பவும் எளிமையா விளக்கமா எல்லா விவரமும் சொல்லியிருக்கேன். அதனாலே இதிலே உங்களுக்குச் சந்தேகம் வர்றதுக்கான வாய்ப்பே இருக்க முடியாது…

இருந்தாலும் கேட்க வேண்டிய கடமை. கேட்கிறேன்…இதுவரைக்கும் நடத்தினதிலே யாருக்காவது ஏதாவது சந்தேகம் உண்டா?-ன்னு கேட்டார்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் சார்! -ன்னு எழுந்திரிச்சி நின்றான் ஒருத்தன்.

‘என்ன’ன்னு கேட்டார்.

‘இதுவரைக்கும் நீங்க என்ன பாடம் சார் நடத்தினீங்க!’ அப்படின்னான் அவன்..!

#படித்ததில் பிடித்தது

How to catch a thief - Birbal's trick

Birbal was one of the nine gems in the court of emperor Akbar. He was respected by everyone for his intelligence and wit. Whenever Akbar was in difficulty, he called Birbal for help. 

Akbar was very fond of jewellery. He had many rings of gold, pearls and diamonds. His favourite ring was the one with a large diamond at the centre and pearls around. 

At the emperor’s palace, there were eight servants who looked after his clothes and jewellery. They also helped him get ready to go to the court. No one else was allowed to enter his room. 

One day, the Emperor wanted to wear his favourite ring, but it was missing. Akbar ordered a search for the ring. But no one could find it. 

Akbar then asked his men to call Birbal. When Birbal came, he told him about the robbery and asked for help. Birbal called all the eight servants who were in charge of the Emperor’s room. 

He gave each of them a stick of the same size and asked them to come back with it the next day. He told them that the stick of the person who had stolen the ring would become longer by one inch that night. 

The next morning, the eight servants stood in a line with their sticks. Birbal caught hold of one of them and took him to Akbar. The man fell at Akbar’s feet and admitted that he had stolen the ring. 

The king was surprised. He asked Birbal how he found out the culprit. Birbal said the thief had cut his stick by an inch fearing that it would grow.

#படித்ததில் பிடித்தது

Note: Do you think, the same technique will work at present? To my surprise it did, when I tried to catch the thief :D

குறுக்கு வழி...


இரண்டு வியாபாரிகள் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.
அவர்களிடையே சுவாரசியமாகப் பேச்சு வந்தது

பேச்சு வாக்கில் ஒரு வியாபாரி சொன்னார்:-
‘என்னுடைய கடையில் போன வருஷம் ஏற்பட்ட தீ விபத்துகு இன்சூரன்ஸ் தொகையாக இரண்டு கோடி ரூபாய் கிடைத்தது’

மற்றவரும் ,”எனக்கும் சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு இன்சூரன்ஸ் தொகை 5 கோடி ரூபாய் கிடைத்தது’ என்றார்.

முதலாமவர் சற்று யோசித்துவிட்டுக் கேட்டார், ‘ஆமா நீங்கள் எப்படி வெள்ளத்தை உண்டாக்கினீர்கள்..!”

#படித்ததில் பிடித்தது

Easy to criticize but difficult to improve

Once upon a time there was a painter who had just completed his course. 

He took 3 days and painted beautiful scenery. He wanted people’s opinion a bout his caliber and painting skills.

He put his creation at a busy street-crossing. And just down below a board which read 

”I have painted this piece. Since I’m new to this profession I might have committed some mistakes in my strokes etc. Please put a cross wherever you see a mistake.” 

While he came back in the evening to collect his painting he was completely shattered to see that whole canvass was filled with Xs (crosses) and some people had even written their comments on the painting.

Disheartened and broken completely he ran to his master’s place and burst into tears.

This young artist was breathing heavily and master heard him saying “I’m useless and if this is what I have learnt to paint I’m not worth becoming a painter. People have rejected me completely. I feel like dying”

Master smiled and suggested “My Son, I will prove that you are a great artist and have learnt flawless painting. Do as I say without questioning it. It WILL work.” 

Young artist reluctantly agreed and two days later early morning he presented a replica of his earlier painting to his master. Master took that gracefully and smiled. - “Come with me.” master said.

They reached the same street-square early morning and displayed the same painting exactly at the same place. Now master took out another board which read 

“Gentlemen, I have painted this piece. Since I’m new to this profession I might have committed some mistakes in my strokes etc. I have put a box with colors and brushes just below. Please do a favor. If you see a mistake, kindly pick up the brush and correct it.” 

Master and disciple walked back home.

They both visited the place same evening. Young painter was surprised to see that actually there was not a single correction done so far. Next day again they visited and found painting remained untouched. They say the painting was kept there for a month for no correction came in!

Moral of the story: - It is easier to criticize, but DIFFICULT TO IMPROVE! - So don’t get carried away or judge yourself by someone else’s criticism and feel depressed… 

- JUDGE YOURSELF! YOU ARE YOUR BEST JUDGE!!!

#படித்ததில் பிடித்தது

திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.


“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.

“என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன்.

வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்.

“ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம் சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. “பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டான். உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை எடுத்து, “இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்’ என்றார்.

நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால், யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை. இந்த மோதிரம் விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான். - அப்போது அந்தப் பெரியவர், “இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்’ என்று சொன்னார்.

பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது. அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர். அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.’

இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.

அப்போது அவனுக்கு குரு சொன்ன வின் மொழி: திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.

#படித்ததில் பிடித்தது