முதன் முறையாக தலைநகருக்குத் திரும்பிய முல்லாவை
ஊர்மக்கள் சூழ்ந்துகொண்டு ”அரண்மனைக்குச் சென்றீர்களா,
அரசரைப் பார்த்தீரகளா? அரசரோடு பேசினீர்களா?” இவ்வாறு
ஆளுக்கொரு கேள்வியாக கேட்டார்கள்.
‘அரண்மனைக்குப் போனேன். அதில் எந்தவித கஷ்டமும்
இல்லை. மன்னரைப் பார்த்தேன் அவருடன் பேசினேன்.
என்னைப் பற்றியும் நமது ஊரைப்பற்றிய விபரங்களையும்
எடுத்துக் கூறினேன். மன்னர் மற்றவர்கள் பேசும்போது
வெறுமனே கேட்டார். அல்லது தலையை ஆட்டினார்.
ஆனால், நான் பேசியபோதோ, மன்னர் வாயைத் திறந்து
பேசினார்”
இவ்வாறு ஊர்மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
முல்லா பதில் கூறினார்.
இதைக்கேட்ட மக்கள் வியப்பால் ஆரவாரம் செய்தனர்.
ஆரவாரம் அடங்கியதும், கூட்டத்தினரில் ஒருவன்,
”முல்லா, உங்களுடன் அரசர் என்ன பேசினார்?” என்று
கேட்டான்.
அதைக்கேட்ட முல்லா, சூழ்ந்து நின்றவர்களை ஒருமுறை
பெருமையுடன் பார்த்துவிட்டு, ”மன்னர் என்ன கூறினார்
தெரியுமா? ‘வாயை மூடு’ என்று கூறினார்” என்று சொன்னார்.
No comments:
Post a Comment