Saturday, April 07, 2012

தேவையற்ற கேள்விகள்

ஒரு சமயம் முல்லாவிடம் கல்வி கற்க வந்த மாணவன்
ஒருவன் முல்லாவைப் பார்த்து, ”ஆசிரியரே! ஒருவன்
முழு உலகையும் வெற்றி கொள்கிறான். மற்றொருவன்,
உலகம் முழுதையும் வெற்றி கொள்ளும் வலிமை
இருந்தும், அவ்வாறு செய்யால் இருக்கிறான். வேறொருவனோ,
உலகம் முழுவதையும் வெல்ல விரும்பும் ஒருவனைத்
தடுத்து, தான் வெற்றி அடைகிறான். இந்த மூவருடைய
செயல்களில் எது மிகவும் கஷ்டமான காரியம்?” என்று
கேட்டான்.

உடனே முல்லா, சீடனைப் பார்த்து, ”சீடனே, நீ கேட்ட
கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஆனால்
இம்மூன்று செயல்களைவிட கஷ்டமான வேறொரு
செயல் உள்ளது. அதைப்பற்றி நான் நன்கு அறிவேன்
என்று சொன்னார்.

”என்ன செயல் அது?” என்று அந்த சீடன் முல்லாவைப்
பார்த்து வியப்புடன் கேட்டான்.

முல்லா, ”தேவையில்லாத கேள்விகளைத் தானாக
ஏற்படுத்திக் கேட்கும் சீடனுக்கு கல்வி கற்பித்துத்
தெளிவை உண்டாக்குவதுதான் அந்தக் கஷ்டமான
காரியம்” என்று சொன்னார்.

No comments:

Post a Comment