Saturday, January 28, 2012

வெற்றியை நோக்கி…!


ஓரிடத்தில்சின்னஞ்சிறிய தவளைகள் குழுவாக வாழ்ந்து வந்தன. அவை ஒரு பந்தயத்திற்குஏற்பாடு செய்திருந்தன. ஓர் உயரமான கோபுரத்தின் உச்சியைச் சென்றுஅடைவதுதான் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அந்தப் பந்தயத்தைக் காணவும் பங்கேற்போரை ஊக்கப்படுத்தவும் பெரிய கும்பல் அந்தக் கோபுரத்தைச் சுற்றிக் கூடியிருந்தது.
ஓட்டப் பந்தயம் தொடங்கியது. "ஓ!வழி மிகவும் கடினம். தவளைகளில் எதுவும் மேலே செல்ல முடியாது". அங்கேஇருந்த யாரும் தவளைகள் உச்சியைத் தொடும் என்று நம்பவில்லை.
இந்தக் கோபுரம் மிகவும்உயரமானது. வெல்வது ரொம்பக் கடினம் என்ற குரல்கள்தான்கேட்டுக்கொண்டிருந்தன. தவளைகள் ஒவ்வொன்றாக சோர்வடையத் தொடங்கின.நம்பிக்கையுடைய மிகச்சில மட்டும் மேல் நோக்கி முன்னேறின.
கும்பல் மேலும் மேலும் கூறியது."இது மிகக் கடினம். யாராலும் வெல்ல முடியாது." சிலரைத் தவிரதன்னம்பிக்கையில்லாத பல தவளைகள் விலகிக் கொண்டன.
பல தவளைகள் சோர்வுற்று விலகின. ஒன்றே ஒன்றைத் தவிர. அது மட்டும் மேலே மேலே சென்று கொண்டிருந்தது.
இறுதியாக அந்த ஒரு தவளை மட்டும்பெரு முயற்சியெடுத்து மேலே ஏறிச் சென்று வெற்றி பெற்றுவிட்டது. அந்தத்தவளை மட்டும் எவ்வாறு வென்றது என்று அறியத் துடித்தன மற்ற தவளைகள்.
ஒரு போட்டியாளர் இது பற்றிக்கேட்டபோது, வென்றது எப்படி என்பது தெரியவந்தது. வெற்றி பெற்ற தவளக்கு காதுகேட்காது. அது ஒரு செவிட்டுத் தவளை.

நீதி:
எதிர்மறையான மனப்பான்மை கொண்டமக்களின் கருத்துக்களை ஒரு போதும் கேட்காதீர்கள். அவர்கள் உங்களின்அற்புதமான கனவுகளையும், விருப்பங்களையும் சிதைத்துவிடுவார்கள். ஆற்றல்தரும் வார்த்தைகளையே எப்போதும் எண்ணுங்கள். நீங்கள் கேட்கும், படிக்கும்ஒவ்வொன்றும் உங்கள் நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும். எனவே, எப்போதும்ஆக்கப்பூர்வமாக சிந்தித்துச் செயல்படுங்கள். உங்கள் கனவுகளை உங்களால்நிறைவு செய்ய முடியாது என்று யாராவது உங்களிடம் சொன்னால், அப்போது மட்டும்செவிடாகிவிடுங்கள்.

#படித்தரில் பிடித்தது 

No comments:

Post a Comment