ஒரு காலத்தில் மனிதன், கடவுளைத் திடீரென்று சந்திக்கும்படி நேர்ந்தது. ”மனித வாழ்க்கையில் லட்சம் ஆண்டுகள் என்பது உங்கள் கணக்கில் எவ்வளவு நாள்?” என்று கடவுளிடம் மனிதன் கேட்டான்.
அது எனக்கு ஒரே ஒரு விநாடிதான்! என்றார் கடவுள்.
மீண்டும் மனிதன் கடவுளிடம், ”எங்களுடைய கோடி ரூபாய் உங்களுக்கு எவ்வளவு மதிப்பு?” என்று கேட்டார். அது எனக்கு ஒரே ஒரு ரூபாய்தான்! என்றார் கடவுள்.
உடனே அந்த மனிதன் தன்னைப் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு கடவுளிடம் அப்படியென்றால் உங்கள் கணக்குப்படி எனக்கு ஒரு ரூபாய் தானம் செய்யுங்களேன்” என்றான் அவசரமாக.
கடவுள் சிரித்துக் கொண்டே ஒரு விநாடி பொறுத்திரு… தருகிறேன்” என்று சொன்னார்!
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment