வீட்டுக்கு வந்திருந்த உறவு சனம் வீட்டைதலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயிருந்தது. வீட்டைப் பெருக்கி சாமான்களை ஒழித்து சரி செய்வதற்குள் பாவம் கவிதாவுக்கு இடுப்பு ஒடிந்து போனது.
இரவு… பாவம் நாள் முழுக்க வேலையில் களைத்துப்போகிறாள். நாம் வேறு அவளை “அந்த" விஷயத்திற்காக படுத்தினால் இன்னும் அலுத்து சலுத்துப் போய்விடுவாளேஎன்று “நல்லா தூங்கு” என்று பெருந்தன்மையாக போர்வையை போர்த்திவிட்டான் கார்திக்.
மறுநாள் கவிதாவின் பேச்சுக்குரல் கேட்டது. பக்கத்து வீட்டு மாமியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“கொடுப்பினை அவ்வளவுதான். நாள் முழுக்க வேலைஇருந்தாலும் நைட், புருஷனோட அணைப்பும் ஆக்ரமிப்பும் கொடுக்கற சுகமே அத்தனை களைப்பையும் போக்கிடும்னு புஸ்கத்துலதான் படிச்சிருக்கேன். அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுமே ?”
கவிதா சொன்னது கேட்டு திகைத்தான் கார்திக்.
[குமுதத்தில் படித்தது]
No comments:
Post a Comment