Showing posts with label #கேட்டதில் பிடித்தது. Show all posts
Showing posts with label #கேட்டதில் பிடித்தது. Show all posts

Sunday, January 29, 2012

தீம் பார்க்....

தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான். 


அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை. மேல போகும்போது ஜயண்ட் வீல்லே தலை சுத்தும், வயித்தைப் புரட்டும்’ என்று தடுத்தாள்!
ஆனால் சேகருடைய பிடிவாதமே வென்றது. ஆயிரம் பத்திரம் சொல்லி அம்மா சேகரை அப்பாவுடன் அரை மனதுடன் அனுப்பி வைத்தாள்.
ஜயண்ட் வீலில் ஏறி உட்கார்ந்ததும் சேகர் அம்மாவுக்குக் கை ஆட்டினான். கொஞ்சம் கொஞ்சமாக வீல் சுற்றவும் சேகர் மேலே மேலே சென்றான்.

‘அய்யோ! பயமா இருக்கே! இறக்கி விடறீங்களா’’ என்ற குரல் பயங்கரமாய்க் கேட்டது.
முழு சுற்றும் முடிந்த பின்னரே ஜயண்ட் வீல் நின்றது. ‘தள்ளுங்க! தள்ளுங்க! காத்து வரட்டும். முதல்ல தண்ணி கொடுங்க’ என்ற வார்த்தைப் பரிமாறல்கள்.

அம்மா நடுவில் படுத்திருந்தாள்.....
ஏதும் அறியாதவராய் சேகரும் அப்பாவும் கூட்டத்தில் நுழைந்தார்கள்.

#படித்ததில் பிடித்தது


Saturday, January 28, 2012

அவசரம் – ஒரு பக்கக் கதை

“ஹலோ, உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?”

தனது கைபேசியில் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து யாராகயிருக்கும் என குழம்பிப்போனாள் ஐஸ்வர்யா.

“பேசறது அப்புறம் இருக்கட்டும். முதல்ல நீ யாரு !” தனது கைபேசியிலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள் ஐஸ்வர்யா.

“அத அப்புறம் சொல்றேன். முதல்ல உன்கூட பேசறதுக்கு அனுமதி கொடு!” –

குறுஞ்செய்தியைப் பார்த்ததும் ஐஸ்வர்யா கோபத்தின் உச்சியில் இருந்தாள். ” நீ என்னடா பேசறது, நானே பேசறேன்!” அவனது எண்ணுக்கு டயல் செய்தாள் ஐஸ்வர்யா.

பொண்ணுங்க நம்பர எப்படியாவது கண்டுபிடிக்கிறது. கண்ட கண்ட மெசேஜ் அனுப்பறது. அப்புறம் ஐ லவ் யூன்னு சொல்றது. இப்பிடி எத்தன பேர்டா கிளம்பியிருக்கீங்க !” கோபத்தில் வெடித்தாள் ஐஸ்வர்யா.

ஹலோ, நான் ஒண்ணும் அந்த மாதிரி ஆள் கிடையாது. பிரவுசிங் சென்டருக்கு போன நீ, உன் பயோடேட்டாவ டைப் பண்ணி அத டெலிட் பண்ணாம வந்துட்ட, வேற யாராவது அத ஓப்பன் பண்ணி படிச்சிருந்தா நீ சொன்னதெல்லாம் நடந்திருக்கும். இனியாவது உஷாரா இரு!” – போனை கட் பண்ணினான் இளமாறன்.

“சாரி!” என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருந்தாள் ஐஸ்வர்யா.



#படித்ததில் பிடித்தது 

மாவீரன்...

ஒரு சமயம் ஓர் ராணுவ வீரனை பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட்டின் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார் ஓர் உயர் ராணுவ அதிகாரி.

“இவன் பெரிய திறமைசாலியான வீரன் அல்லன்; போரிலிருந்து இவனுக்கு ஓய்வு கொடுத்து அனுப்ப வேண்டும்,” என்று வீரனின் மேல் குற்றம் சுமத்தினார் உயர் அதிகாரி.

“இவன் என்ன செய்தான்?” என்று உயர் அதிகாரியிடம் கேட்டார் நெப்போலியன்.

“இவன் எதிரிகளின் தாக்குதலில் ஒன்பது முறை தரையில் வீழ்ந்தான். பத்தாவது முறை தான் எழுந்தான்!” என்றார் உயர் அதிகாரி. அதைக் கேட்ட நெப்போலியனின் முகம் பிரகாசமாகியது.

அவர் “சட்’டென்று அந்த ராணுவ வீரனின் கைகளைப் பிடித்து, “சபாஷ் வீரனே! உன் வீரத்தையும் விடாமுயற்சியையும் நான் பாராட்டுகிறேன்.

ஒன்பது முறை நீ தரையில் வீழ்ந்தாலும், சோர்ந்துவிடாமல்… பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றி பெற்றாயே… உண்மையில் நீதான் மற்றவர்களை விட மாவீரன்!” என்று பாராட்டினார்.

ராணுவ வீரன் மனம் மிக மகிழ, அவன் மேல் குற்றம் சுமத்திய உயர் அதிகாரி செய்வதறியாது தலை கவிழ்ந்தார்.



#படித்ததில் பிடித்தது 

Trade off...

Once upon a there lived an old lady. She had a loving son, who took care of her very well. That old lady was badly in need of some money and hence started praying God.

Few days later she had a dream, in which she dreamt that God came in front of her and asked 'what do you want'?

The old lady honestly replied 'I am in need of some money could you some how arrange it for me'?

'I shall arrange, but I will take some thing from you in return, is that ok'? Asked God.

The old lady was over whelmed and agreed for the condition.

Dream ended...

Few days later she lost her son in an accident and she got her son's insurance policy money.



#கேட்டதில் பிடித்தது