Showing posts with label mulla. Show all posts
Showing posts with label mulla. Show all posts

Saturday, April 07, 2012

சபதம்

முல்லா தீவிரமான குடிகாரர்.ஒரு புத்தாண்டு தினத்தன்று,”இந்த ஆண்டு நான்
குடிக்க மாட்டேன்,”என்று சபதம் செய்தார்.
 
அடுத்த நாள் அவர்மது விற்கும் கடை வழியே செல்ல வேண்டியிருந்தது. அவர் கடையைத்
திரும்பப் பார்க்காது இருபது மீட்டர் தூரம் சென்று விட்டார்.அவருக்கு மிக்க
மகிழ்ச்சி.
 
”முல்லா,மதுக் கடைக்கு அருகில் சென்றும் ,நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக
முன்னேறி விட்டாயே!பரவாயில்லை.அந்த மகிழ்ச்சியில் நட.போய் மது
அருந்தலாம்.”என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு முல்லா அன்று இரட்டிப்பாய்
மது அருந்தினார்.

நீங்கள் நால்வருமா இரட்டை சகோதரர்கள்?

முல்லா ஒரு முறை தன சகோதரனின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்கு
சென்று, நன்கு சாப்பிட்டு மகிழ்வுடன் சகோதரனுடன் அரட்டை அடித்துக்
கொண்டிருந்தார். இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள்.
 
அப்போது எதிரில் ஒரு மனிதன் நன்கு குடித்து விட்டு இவர்களையே அதிசயமாகக்
கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
முல்லா அவனிடம் சொன்னார், ”நீ குடித்ததனால் தான் நாங்கள் இருவராகத் தெரிகிறோம்
என்று எண்ணாதே. நாங்கள் ஒரே மாதிரி இருக்கும் சகோதரர்கள்.”
 
அதற்கு அந்தக் குடிகாரன் மீண்டும் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களைப்
பார்த்துக் கொண்டே கேட்டான், ”நீங்கள் நால்வருமா?”

தேவையற்ற கேள்விகள்

ஒரு சமயம் முல்லாவிடம் கல்வி கற்க வந்த மாணவன்
ஒருவன் முல்லாவைப் பார்த்து, ”ஆசிரியரே! ஒருவன்
முழு உலகையும் வெற்றி கொள்கிறான். மற்றொருவன்,
உலகம் முழுதையும் வெற்றி கொள்ளும் வலிமை
இருந்தும், அவ்வாறு செய்யால் இருக்கிறான். வேறொருவனோ,
உலகம் முழுவதையும் வெல்ல விரும்பும் ஒருவனைத்
தடுத்து, தான் வெற்றி அடைகிறான். இந்த மூவருடைய
செயல்களில் எது மிகவும் கஷ்டமான காரியம்?” என்று
கேட்டான்.

உடனே முல்லா, சீடனைப் பார்த்து, ”சீடனே, நீ கேட்ட
கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஆனால்
இம்மூன்று செயல்களைவிட கஷ்டமான வேறொரு
செயல் உள்ளது. அதைப்பற்றி நான் நன்கு அறிவேன்
என்று சொன்னார்.

”என்ன செயல் அது?” என்று அந்த சீடன் முல்லாவைப்
பார்த்து வியப்புடன் கேட்டான்.

முல்லா, ”தேவையில்லாத கேள்விகளைத் தானாக
ஏற்படுத்திக் கேட்கும் சீடனுக்கு கல்வி கற்பித்துத்
தெளிவை உண்டாக்குவதுதான் அந்தக் கஷ்டமான
காரியம்” என்று சொன்னார்.

வாயை மூடு – முல்லா கதை


முதன் முறையாக தலைநகருக்குத் திரும்பிய முல்லாவை
ஊர்மக்கள் சூழ்ந்துகொண்டு ”அரண்மனைக்குச் சென்றீர்களா,
அரசரைப் பார்த்தீரகளா? அரசரோடு பேசினீர்களா?” இவ்வாறு
ஆளுக்கொரு கேள்வியாக கேட்டார்கள்.

‘அரண்மனைக்குப் போனேன். அதில் எந்தவித கஷ்டமும்
இல்லை. மன்னரைப் பார்த்தேன் அவருடன் பேசினேன்.
என்னைப் பற்றியும் நமது ஊரைப்பற்றிய விபரங்களையும்
எடுத்துக் கூறினேன். மன்னர் மற்றவர்கள் பேசும்போது
வெறுமனே கேட்டார். அல்லது தலையை ஆட்டினார்.
ஆனால், நான் பேசியபோதோ, மன்னர் வாயைத் திறந்து
பேசினார்”

இவ்வாறு ஊர்மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
முல்லா பதில் கூறினார்.

இதைக்கேட்ட மக்கள் வியப்பால் ஆரவாரம் செய்தனர்.

ஆரவாரம் அடங்கியதும், கூட்டத்தினரில் ஒருவன்,
”முல்லா, உங்களுடன் அரசர் என்ன பேசினார்?” என்று
கேட்டான்.

அதைக்கேட்ட முல்லா, சூழ்ந்து நின்றவர்களை ஒருமுறை
பெருமையுடன் பார்த்துவிட்டு, ”மன்னர் என்ன கூறினார்
தெரியுமா? ‘வாயை மூடு’ என்று கூறினார்” என்று சொன்னார்.

தவறு எது தெரியுமா?

ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருந்தார் முல்லா.
அப்போது அங்கு கிடந்த குப்பையின் மத்தியில் ஏதோ
மின்னுவதைக் கண்டு அதை ஆர்வமாய் எடுத்துப் பார்த்தார்.
அது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் உடைந்த துண்டு.

முல்லா அதில் தன் முகத்தைப் பார்த்தபோது, அருடைய
உருவம் அதில் விகாரமாய்த் தெரிந்தது. ”சே! இந்த
கண்ணாடி முகத்தை விகாரமாகக் காட்டுவதால்தான்
இதைக் குப்பையில் போட்டுவிட்டார்கள் போல” என்று
முல்லா கூறினார்.

இதைக்கேட்ட ஒருவன், ”ஏன், கண்ணாடியை குறை
கூறுகிறீர்கள்? கண்ணாடி விகார முகத்தைக் காட்டுகிறது
என்று சொல்கிறீர்களே… தவறு யாருடையது?” என்று
கேட்டான்.

”தவறு என்னுடையதுதான்” என்று கூறிய முல்லா,
கண்ணாடியைக் குப்பையில் வீசிவிட்டு, ”என்னுடைய
தவறு என்ன தெரியுமா? இக்கண்ணாடியைக்
குப்பையிலிருந்து எடுத்துப் பார்த்ததுதான்” என்று சொன்னார்.

Wednesday, December 21, 2011

சீக்கிரம் எழுவது ஆபத்து...

முல்லா நசிருதீன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் கூட காலையில் விரைவில் எழுந்தது இல்லை.அவனது தந்தை எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை விரைவில் படுக்கையிலிருந்து எழ வைக்க முடியவில்லை.

ஒருநாள் வழக்கம்போல அவர் அதிகாலை எழுந்து வெளியே சென்றார்.அப்போது ஒரு பறவை தரையில் கிடந்த புழுவைத் தூக்கி சென்றது.  பறவை அதிகாலையில் எழுந்ததால்தானே காலை இளம் குளிரில் வெளி வந்த புழுவைப் பிடிக்க முடிந்தது என்று எண்ணினார்.

பின்னர் அவர் சாலையில் ஒரு துணிப்பை கிடப்பதைப் பார்த்து அதை எடுத்து அதில் பொற்காசுகள் இருப்பதைக் கண்டார்.  சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் தேடி வராததால் அதிகாலையில் எழுந்ததற்குக் கிடைத்த பரிசு என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நசிருதீனிடம் சொல்லி விரைந்து எழ வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தலாம் என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.

தந்தை எழுப்பியும் நசிருதீன் எழவில்லை.  அவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.  அப்போதும் அவன் அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்தான்.  தந்தை தான் கண்ட இரு நிகழ்வுகளையும் சொல்லி மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார்.

நசிருதீன் சொன்னான்,”என்ன அப்பா,உங்களுக்கு விபரமே தெரியவில்லை.அந்தப்புழு அப்பறவை எழுமுன் எழுந்ததால்தானே அது பறவைக்கு இரையாக நேர்ந்தது.  அதேபோல் எவனோ ஒருவன் உங்களுக்குமுன் எழுந்து சென்றதால்தானே தன பொற்காசுகளைத் தொலைத்துவிட்டு இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்?

எனவே சீக்கிரம் எழுவது ஆபத்துதான்,”என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டான்.

தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

#படித்ததில் பிடித்தது

யார் செய்தால் என்ன?

முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம் சொன்னார்,
”பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.  அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக் கொண்டிருப்பாள்.  என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.

இப்போது எல்லாம் மாறிவிட்டது.இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது. என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.”

முல்லா சொன்னார், ’அதனால் என்ன?முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா? யார் செய்தால் என்ன?”

#படித்ததில் பிடித்தது