Showing posts with label childhood. Show all posts
Showing posts with label childhood. Show all posts

Sunday, July 22, 2012

நல்லா கடிச்சு சாப்பிடணும்...

அப்போது எனக்கு 4வயது இருக்கும்...தினமும் இரவுச் சாப்பாடு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்...ஒருவருக்கொருவர் பரிமாறிகொள்வது...

ஒருநாள்...
நானே சாப்பிடுகிறேன் என்றது ம் அம்மாவுக்கு சந்தோஷம்...தட்டில் சாப்பாடு போட்டு நன்றாக பிசைந்து என் கையில் கொடுத்தார் அம்மா...
முதல் வாய் சாபிட்டேன்...பாதி கீழே இரைத்தேன்...மீதி வாய்க்குள் போனது...
இரெண்டு...மூன்று...வாய் சாப்பிட்டதும் புறைக்கேறியது...அம்மா தணணீர் கொடுத்தாரகள்...

அப்போது...
நல்லா கடிச்சு சாப்பிடு...என்றார் அப்பா...

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை இல்லையா?

அதான் இன்னமும் தொடர்கிறேன்...ஆனால் அப்பா சொன்னது சாப்பாட்டுக்கு மட்டும் என்பது பிறகுதான் புரிந்தது...

Saturday, July 21, 2012

அந்த ரூம் இருட்டா இல்லே...

அப்போது நாங்கள் வசித்த இடத்தில் மின்சார இணைப்பு கிடையாது.  தினமும் லாந்தர் விளக்குதான்.  அம்மா தினமும் லாந்தர் விளக்கின் கண்ணாடி சிம்னீ-யை நன்கு சுத்தம் செய்வார்கள்.  அப்போதுதான் வெளிச்சம் நல்லா தெரியும் என்று.

ஒருநாள்....
"டேய் ரவி, இந்தா இந்த லாந்தர் விளக்க அந்த இருட்டா இருக்குற ரூம்ல வை..." என்று என்னிடம் ஒரு லாந்தர் விளக்கை கொடுத்தார் அம்மா.


போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டேன்...கையில் லாந்தர் விளக்கு இன்னும் இருப்பதைக் கண்டு 
"என்ன ஆச்சு?  ஏன் விளக்கை அங்கே வைக்க வில்லை" என்று வினவினார் அம்மா...

"நான் போயி பார்த்தேன் மா, நீ சொன்னா மாதிரி அந்த ரூம் இருட்டா இல்லே" என்றேன் நான்.

நம்புங்க நான் சரியாத்தான் சொன்னே...