சென்ற ஆண்டு சென்னை சென்றிருந்தப்ப என் ஸ்கூட்டரில் (DURO) பயணித்துக் கொண்டிருந்தேன்... திடீரென கவனித்தேன் ஒரு ரோட்டில் ஒரு பள்ளம். மிதமாக ப்ரேக் அடித்து பள்ளத்தில் இறக்கி ஏற்றினேன்...
அருகில் வந்து கொண்டிருந்த ஒரு அறிமுகமில்லா ந(ண்)பர் "ஏன் பாஸ் பள்ளத்துல விட்டு எடுக்குறீங்க? shock absorber உடைஞ்சிடப் போகுது" என்றார்.
நன்றியுடனும் புன்முறுவலுடனும் அவரைப் பார்த்தேன். 'Helmet' அவர் தலையில் இல்லாமல் அவர் பைக்கின் கண்ணாடியில் இருந்தது. என் வண்டியின் மீது இருந்த கரிசனம் கூட அவர் உயிருக்கு இல்லையே என எண்ணிக் கொண்டே விரட்டினேன் வண்டியை...