ஒரு சமயம் ஓர் ராணுவ வீரனை பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட்டின் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார் ஓர் உயர் ராணுவ அதிகாரி.
“இவன் பெரிய திறமைசாலியான வீரன் அல்லன்; போரிலிருந்து இவனுக்கு ஓய்வு கொடுத்து அனுப்ப வேண்டும்,” என்று வீரனின் மேல் குற்றம் சுமத்தினார் உயர் அதிகாரி.
“இவன் என்ன செய்தான்?” என்று உயர் அதிகாரியிடம் கேட்டார் நெப்போலியன்.
“இவன் எதிரிகளின் தாக்குதலில் ஒன்பது முறை தரையில் வீழ்ந்தான். பத்தாவது முறை தான் எழுந்தான்!” என்றார் உயர் அதிகாரி. அதைக் கேட்ட நெப்போலியனின் முகம் பிரகாசமாகியது.
அவர் “சட்’டென்று அந்த ராணுவ வீரனின் கைகளைப் பிடித்து, “சபாஷ் வீரனே! உன் வீரத்தையும் விடாமுயற்சியையும் நான் பாராட்டுகிறேன்.
ஒன்பது முறை நீ தரையில் வீழ்ந்தாலும், சோர்ந்துவிடாமல்… பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றி பெற்றாயே… உண்மையில் நீதான் மற்றவர்களை விட மாவீரன்!” என்று பாராட்டினார்.
ராணுவ வீரன் மனம் மிக மகிழ, அவன் மேல் குற்றம் சுமத்திய உயர் அதிகாரி செய்வதறியாது தலை கவிழ்ந்தார்.
#படித்ததில் பிடித்தது

No comments:
Post a Comment