Saturday, January 28, 2012

சில்லுன்னு ஒரு பேய்க்கதை


ராத்திரி பண்ணிரெண்டு மணி, அந்த அத்துவான ராத்திரில கும்மிருட்டு. சில்லுன்னு காத்து வேற! அப்போ அந்த ரோட்டுல ஒரு ஆளு திக் திக்குன்னு அடிச்சிக்குற பயத்தோட தட்டுத் தடுமாறி வந்துகிட்டிருக்கான். அப்போ பார்த்து ஆண்டவனா அனுப்பி வெச்சா மாதிரி ஒரு பஸ். தூரத்துல வருது. இவன் வேகமா ஓடிப் போயி பஸ்ஸுக்குள்ள ஏறிக்கறான். பஸ்ஸுக்குள்ள பார்த்தா டிரரவர் மட்டும்தான். வேற யாரும் இல்லை. பஸ் மெதுவா நகருது. அப்படியே ஒரு சீட் பிடிச்சி உக்காந்துக்குறான் நம்ம ஆள்.

திடீர்னு “சப்”னு அவன் கன்னத்துல ஒரு அறை விழுது. விழுந்தடிச்சிகிட்டி சீட்டிலிருந்த எழுந்திருக்கறான்.

“ஏண்டா, நாங்களே பஸ் நகரலைன்னு தள்ளிகிட்டி வரோம், ஜம்முன்னு வந்து உக்காந்துகிட்டயா.. வந்து தள்ளுய்யா வண்டிய எங்களோட சேர்ந்துன்னு..” கண்டக்டர் திட்டிடுப் போறான்.

#படித்ததில் பிடித்தது 

No comments:

Post a Comment