“என்ன… ரொம்ப கவலையாயிருக்கீங்க?” மனைவி பத்மா கேட்க,
“ஜூன் மாசம்னா சும்மாவா? ஸ்கூல் ஃபீஸ், அட்மிஷன், புக்ஸ் எல்லாத்துக்கும் சேர்த்து பையனுக்கு 18 ஆயிரம் ரூபாய் தேவை. எட்டாயிரம்தான் இருக்கு” என்றன் சீனு.
“கவலைப்படாதீங்க நான் கட்டறேன்” என்று புன்சிரித்தாள் பத்மா.
“எப்படி? நீ என்ன சம்பாதிக்கிறியா?”
“இல்லை சேமிக்கிறேன்.”
“புரியலை!”
“பால்லேர்ந்து பருப்பு,எண்ணெய் காய்கறி வரைஎல்லாத்துலயும் தினமும் குறைவா யூஸ் பண்ணினேன். ஒரு லிட்டர் பால்ல 10மி.லி. குறைஞ்சா என்ன கஷ்டம்? ஆனா மொத்த செலவுல 1 பர்சன்ட் மிச்சம்.
ஐயாயிரம் செலவாகிற நேரத்துல ஒரு ஐம்பது சேக்கலாமில்ல… அப்படி சேத்ததுதான் இது”என்று நூறு ரூபாய் கட்டு ஒன்றை தந்தாள் பத்மா.”
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment