Monday, May 07, 2012

அறியாமை...


ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு மனித உறுப்புகளைப் 
பற்றி பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“மனிதர்களுக்கு இரண்டு கால்கள்” ஆசிரியர் சொன்னார்.
மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“மனிதர்களுக்கு இரண்டு கைகள்” ஆசிரியர் சொன்னார்.
சட்டென்று ஒரு மாணவன் இடை மரித்தான்.”எனது
தந்தைக்கு மூன்று கைகள்….”

ஆசிரியர் திகைத்தார்.

“அதெப்படி…?” என்று ஆசிரியர் கேட்டார்.

“வலது கை…” வலது கையைக் காட்டி மாணவன்
சொன்னான்....”இடது கை”என்று அந்த மாணவன் இடது
கையையும் காட்டினான்.

ஆசிரியர் அவசரமாக கேட்டார் ”எங்கே மூன்றாவது கை…?”

மாணவன் நிதானமாக சொன்னான் “வழுக்கை……….???”

கை என்றால் என்னதென்று ஆசிரியர் சொல்ல, அந்த
மாணவனோ கை என்பதற்கு வேறு விதத்தில் அர்த்தம்
கற்பித்துக் கொண்டிருந்தான்.

இதைப் போலத்தான் பலர் பல விஷயத்துக்கு
அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…!


#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment