ஒரு முறை சுஜாதை என்ற பெண்மணி தன் இறந்த மகனை எடுத்துக் கொண்டு, புத்தரிடம் வந்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லி தன் ஒரே மகனை பிழைக்க வைக்கச் சொல்லி கேட்டாள்.
‘சரி செய்கிறேன் ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்' என்றார் புத்தர். ‘சரி சொல்லுங்கள்’ என்றால் சுஜாதை.
‘சரி அம்மா, இந்த ஊரில் யார் விட்டில் துக்கம் இதுவரை நடக்கவில்லையோ அவர்கள் வீட்டிற்கு சென்று சிறிது உப்பு வாங்கிவா, உன் மகனை பிழைக்க வைத்துவிடுகிறேன்’ என்றார்.
இது எளிதான வேலை என்று நினைத்தவள் இறந்த மகனை அங்கேயே விட்டுவிட்டு, வீடுவீடாக சென்று விசாரித்தாள், ஒவ்வொரு வீட்டிலும் எதோ ஒரு விதத்தில் துக்கம் நடந்ததைச் சொல்லி கையை விரித்தார்கள். மாலை வரை ஒவ்வொரு வீடாக சென்றவளுக்கு இறுதியில் மரணம் என்பது இயற்கை என்று தெரிந்தது.
பின்பு புத்தரை வணங்கி, தாம் மரணத்தை உணர்ந்து கொண்டதாக சொன்னாள். பின்பு ஒரு நாள் பெளத்த துறவியானாள். மரணம் என்பது இயற்கை அது வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரையாக சொல்லாமல் அவளாகவே புரிந்து கொள்ள வைத்தார் புத்தர்.
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment