ஒரு பெரிய ஜென் துறவி. வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். புத்தரின் நெறிகளைச் சொல்லிக்கொடுத்தார். ஒருநாள் யாரோ அவரிடம் கேட்டார்கள். ‘இந்த உலகத்திலேயே மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்ன?’ ‘ஒரு சொட்டுத் தண்ணீர்!’ ’என்ன சாமி? ஒரு சொட்டுத் தண்ணீருக்கு என்ன மதிப்பு இருக்கு? அதைப்போய்ப் பெரிய விஷயமா சொல்றீங்களே?’ துறவி சிரித்தார். ஒரு கதை சொன்னார்.
இ-ஷான் என்ற ஜென் மாஸ்டர். குளிப்பதற்காக வெந்நீர்த் தொட்டியில் இறங்கினார். அந்தத் தொட்டியில் வெந்நீரின் சூடு மிக அதிகமாக இருந்தது. ‘யாராச்சும் கொஞ்சம் பச்சத் தண்ணி கொண்டுவாங்க!’ என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொன்னார். உடனே, ஒரு சீடன் ஓடினான். பக்கெட் நிறையத் தண்ணீரைக் கொண்டுவந்தான். வெந்நீர்த் தொட்டியில் ஊற்றினான். ‘போதும்’ என்றார் இ-ஷான். ‘இப்போ சூடு சரியா இருக்கு!’
ஆனால் அந்தச் சீடனின் பக்கெட்டில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் மீதமிருந்தது. அவன் அதைக் கீழே ஊற்றினான். ‘முட்டாள்’ கோபமாகக் கத்தினார் இ-ஷான். ‘தண்ணீரை வீணாக்கிவிட்டாயே!’ ‘குருவே, பாக்கி இருக்கும் தண்ணீரைக் கீழே ஊற்றினேன். இது ஒரு பெரிய தவறா?
அந்தக் கொஞ்சூண்டு தண்ணீரை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யமுடியும்?’ ‘இந்த உலகத்தில் வீணான விஷயம் என்று எதுவுமே இல்லை’ என்றார் இ-ஷான். ‘எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு பலன் உண்டு. உன்னுடைய பக்கெட்டில் இருந்தது ஒரே ஒரு துளி தண்ணீர் என்றாலும், அதை ஒரு செடிக்கு ஊற்றினால் செழித்து வளரும். நாலு பேருக்குப் பயன்படும்!’ ‘அதுமட்டுமில்லை, அந்தத் தண்ணீரும், பயனில்லாமல் கீழே விழுந்து வீணாவதைவிட ஒரு செடியின் வேரில் ஊற்றப்படுவதைதான் விரும்பும். புரிகிறதா?’
இ-ஷான் இப்படிச் சொன்னதும் அந்த சிஷ்யனுக்கு ஞானம் பிறந்துவிட்டது.
#படித்ததில் பிடித்தது

No comments:
Post a Comment