ஓர் அரசன். ஜென் கற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் யாரிடம் படிப்பது என்று தெரியவில்லை.
அமைச்சர்களைக் கேட்டால் இரண்டு துறவிகளை அடையாளம் காட்டினார்கள். இருவருமே பெரிய மகான்கள்தான்.
ஆனால் அதற்காக, இரண்டு குருக்களிடம் பாடம் படிக்கமுடியுமா? இவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்படி?
அரசன் அந்த இரு துறவிகளையும் அழைத்தான். தன்னுடைய குழப்பத்தைச் சொன்னான்.
முதல் துறவி மலர்ச்சியாகச் சிரித்தார். ‘அரசனே, நீ பெரிய புத்திசாலி, உனக்கு ஜென் கற்றுத்தருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!’ என்றார்.
இரண்டாவது துறவி அவரை வெறுப்போடு பார்த்தார். ‘யோவ், நீயெல்லாம் ஜென் படிச்சவனா?’ என்றார். ‘ராஜா-ங்கறதுக்காக அந்தாளை இஷ்டப்படி புகழறதா? இவன் ஒரு முட்டாள். இவனுக்கு ஜென் கத்துத்தரணும்ன்னா பல வருஷம் தலைகீழா நின்னு தண்ணி குடிக்கவேண்டியிருக்கும்!’ அவர் இப்படிச் சொன்னதும் அமைச்சர்களெல்லாம் பயத்தோடு அரசரைப் பார்த்தார்கள்.
ராஜாவை இப்படிப் பேசியதற்காக அந்த இரண்டாவது துறவியின் தலை தரையில் உருளப்போகிறது என்பது அவர்களுடைய எண்ணம்!
ஆனால், அரசன் அப்படிச் செய்யவில்லை. அந்த இரண்டாவது துறவியிடமே சீடனாகச் சேரத் தீர்மானித்தான். ‘என்னைப் புத்திசாலி என்று நினைப்பவரிடம் நான் எப்படிப் பாடம் படிக்கமுடியும்? அதற்குப் பதிலாக என்னை முட்டாளாகக் கருதுகிறவரிடம் என்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டுவிடுவதுதான் என்னுடைய புத்திக்கு நல்லது!’

#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment