Saturday, March 10, 2012

பெண்ணாசை


அரசன் மிகப் பெண்ணாசை கொண்டவனாக இருந்தான்.
அப்படி இருக்கக்கூடாது என்று அவனக்கு புத்தி சொல்லி வந்தான் 
அவனது மந்திரி.
-
அரண்மனை நர்த்தகி ஒருநாள் அரசனைப் பார்த்து, ‘நீங்கள் முன்பு போல் 
என்னிடம் பிரியமாக இல்லையே…” என்று கண்ணைக் கசிக்கினாள்.
-
”உன் மீது பிரியம் வைக்கக்கூடாது என்று மந்திரி தடுக்கிறார்…”
-
”அந்த மந்திரி ரொம்ப யோக்கியரா…? உணமைமையை நீங்களே 
பாருங்கள்” என்று ஒரு திட்டத்தை சொன்னாள். அவனும் சம்மதித்தான்.
-
மந்திரியை தனியாகச் சந்தித்த நர்த்தகி, அவனைத் தன் சாகசங்களால் 
வசப்படுத்தினாள். மந்திரி ஆவலோடு அவளருகில் வந்தான். ”என்னைச் 
சுமந்து கொண்டு சிறிது தூரம் செல்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால்தான் 
என்னைத் தொடலாம்” என்றாள் அவள்.
-
மந்திரியும் சம்மதித்தான். தவழ்பவனைப் போல கால்களை மடக்கி, கைகளை 
ஊன்றிக் கொண்டான். நர்த்தகி அவன் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். 
அவனைத் தவழ்ந்து செல்லும்படி சொன்னாள். அவள் திட்டப்படி அரசனும் 
அங்கே வந்து விட்டான்.
-
”மந்திரியாரே…என்ன இது? பெண்ணாசை கூடாது என்று என்னைத் தடுத்த 
நீரே இப்படி ஆகி விட்டீரே..?”
-
”அரசே! உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கவே 
நான் இப்படிச் செய்து காட்டிகிறேன்” என்று சமாளித்து அரசனின் பாராட்டைப் 
பெற்றான் மதியூகி மந்திரி.

#படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment