ஜென் துறவி ஒருவர். அவசரமாக டெல்லிக்குப் பயணம் செய்யவேண்டியிருந்தது. டாக்ஸியில் விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்.
அவர்கள் சிறிது தூரம் சென்றதும், பின்பக்கமிருந்து ஏதோ சத்தம். டாக்ஸியை நிறுத்திப் பார்த்தால், டயர் பஞ்சர்.
’ஸாரிங்க, நான் ஸ்டெப்னி டயர்கூடக் கொண்டுவரலை! இனிமே ந்ஆம ஒரு மெக்கானிக் ஷாப்பைக் கண்டுபிடிச்சு டயருக்குப் பஞ்சர் போடறதுக்குள்ள உங்க ஃப்ளைட் போயிடும்’ என்றார் டிரைவர். ‘வேணும்ன்னா உங்களுக்கு நான் ஒரு ஆட்டோ பிடிச்சுக் கொடுக்கட்டுமா?’
’சரி’ என்றார் ஜென் துறவி. இருவரும் அந்தப் பக்கமாகச் சென்ற ஆட்டோக்களைக் கை காட்டி நிறுத்த முயன்றார்கள்.
ஆனால், அவர்கள் கிட்டத்தட்ட கால் மணி நேரம் முயற்சி செய்தும் ஒரு வண்டிகூட நிற்கவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களில் ஏற்கெனவே ஆள்கள் இருந்தார்கள். மற்ற ஆட்டோக்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் பறந்தன.
டாக்ஸி டிரைவர் வருத்தமாகச் சொன்னார். ‘என்னால உங்க பயணம் பாதிக்கப்பட்டுடுமோ-ன்னு பயமா இருக்கு சாமி!’
ஆனால், அந்தத் துறவி அவனைக் கோபிக்கவில்லை. சிரித்தார். முதலில் மெதுவாக, பின்னர் பலமாக.
‘ஏன் சாமி சிரிக்கறீங்க? சாபம் கொடுக்கப்போறீங்களா?’
’இல்லை தம்பி, என் நிலைமையை நினைச்சுச் சிரிச்சேன்!’
‘அதெப்படி சாமி இந்த டென்ஷனான நேரத்திலயும் உங்களால சிரிக்கமுடியுது?’
’இதுமாதிரி எதிர்பாராத சம்பவங்கள் எல்லாருக்கும் நடக்கறதுதான்’ என்றார் அந்த ஜென் துறவி. ‘ஆனா, நாம அந்தச் சம்பவத்துக்கு உள்ளே இருந்து யோசிச்சா வெறும் பதற்றம்தான் மிஞ்சும், அதிலிருந்து விலகி, கொஞ்சம் வெளியே நின்னு பார்த்தா, சிரிப்பு வரும், மனம் லேசாகும், டென்ஷனில்லாம, இந்த நிலைமையைச் சரி பண்ணறதுக்கு என்ன செய்யணும்ன்னு நிதானமா யோசிக்கமுடியும்!’
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment