ஒரு சமயம் ஒரு ஊரில் ஒரு பெருஞ்செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 மகன்கள். அவர்களை அன்புடனும், அறிவுடனும் வளர்த்து வந்தார். இருப்பினும் கொஞ்சம் கண்டிப்பானவர், சிறு தவறு நேர்ந்தாலும் அதை மன்னிக்க மாட்டார்.
மகன்கள் நங்கு வளர்ந்து மணம் முடிக்கும் வயதையும் அடைந்தனர். மூவருக்கும் மணம் முடித்தார். மணம் முடித்த கையோடு, அவர் தன் ஊரில் இருக்கும் பெரியவர்களை அழைத்து விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
வருபவர்கள் மிகவும் மரியாதைக்குறியவர்கள் என்பதால் தன் மனைவிக்கும், மருமகளுக்கும், விருந்தோம்பும் அறிவுரைகளை கூறிக்கொண்டிருந்தார். மருமகள்கள் புதிது என்பதால் மறுபடியும் மறுபடியும், "ஏதேனும் தவறு நடந்தால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்று கிட்டத்தட்ட மிரட்டினார்.
விருந்துக்கான நாள் வந்தது. அலங்காரம், சமையல் எல்லாம் தடபுடலாக நடந்தது. விருந்தினர் எல்லோரும் வந்தாயிற்று. சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, சாப்பிடலாமே என்றார்.
முதல் மருமகள் தன் மாமனாரின் அறிவுரைப்படி பலகை வைத்து, இலையை போட்டார்.
இரண்டாம் மருமகள், தன் மாமியாருடனும், அண்ணியுடனும் இலையில் எல்லா பதார்த்தங்களையும் பறிமாறினார்.
விருந்தினர் பறிமாறிய எல்லாவற்றையும் பார்த்து பூரிப்படைந்தனர். சாப்பிட முற்பட்டனர்.
முதல் மருமகள், இரண்டாம் மருமகள் தன் அறிவுரைப்படி செவ்வனே செய்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார் மாமனார். இதைக் கண்ட மூன்றாம் மருமகளுக்கு ஒரே படபடப்பு. எங்கே தன் பங்கில் குறை வந்துவிடுமோ என்று.
உடனேயே தனக்கு கொடுத்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார். என்ன என்று கேட்கிறீர்களா? அதான் "இலையை எடுப்பது".
சாப்பிட்டார்களா இல்லையா என்று கூட கவனிக்காமல் தனக்கு விதிக்கப்பட்ட வேலையில் மட்டுமே குறியாக இருந்து சரியாக செய்து விட்டதாக எண்ணிக்கொண்டார்.
பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
இப்படித்தான் நிஜ வாழ்கையிலும் பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment