இடம்: மும்பை
ஒரு நாள் காலை 7மணி அளவில் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். இன்ன இடத்துக்கு போகவேண்டும் என்று சொன்னேன். மொழிப் ப்ரச்சனையால் ஆட்டோ சாரதி கேட்ட கேள்வி புரியவில்லை.
"புரியவில்லை" என்றேன்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வண்டியை ஓட்ட ஆரம்பித்தார் சாரதி.
ஆட்டோ டப் டப் டப் என ஏதோ ஒரு தெருவில் போய்க் கொண்டிருந்தது. வழக்கமாக போகும் ரூட் இல்லையே என்று வினவினேன். சிரிது பேச்சுக்கப்புறம் புரிந்தது சாரதி ஏதோ தப்பாக புரிந்துள்ளார் என்பது.
சரியென்று "கூகிள் மேப்ஸ்"சிடம் போகும் இடத்துக்கு வழி கேட்டேன். கூறியது. அதை ஆட்டோ சாரதிக்கு தெரிந்த ஹிந்தியில் கூறினேன்.
அவர் தலையில் அடித்துக்கொண்டு ஏதோ சொன்னார் (நிச்சயமாக ஹிந்தியும் இல்லை மராத்தியும் இல்லை). கடுப்பயிட்டார் என்பது மட்டும் தெரிந்தது.
இதென்ன வம்பாப் போச்சு என்று இங்கேயே கட் பண்ணிட்டு வேற ஆட்டோவில் போகலாமா என்று யோசித்து பர்ஸைப் பார்த்தால் ₹500ரில் காந்தி சிரித்தார். ₹500ரைத் தவிர வேறு தாள் இல்லை. சில்லரையும் ₹10தேறும் அவ்ளோதான்.
மவனே மாட்டினேன்னு மனசுக்குள்ளேயே என்னை பயமுறுத்திட்டு, போகும் வழியை கூறிக்கொண்டே ஏதாவது கடை இருக்கும், அதில் ஏதாவது வாங்கினால் சில்லரை கிடைக்குமே என்று பார்த்துக் கொண்டே வந்தேன். காலை 7மணிக்கு எந்த கடையும் திறக்கவில்லை.
இறங்கும் இடம் வந்தது... ₹112 என்று மீட்டர் காட்டியது. ₹500ம் ஒரு ₹2ம் பயந்துக்கிட்டே நீட்டினேன், கை/கால் நடுங்கல அவ்ளோதான் பாக்கி...
சாரதி, தன் பர்ஸை பார்த்தார், அவரிடம் ₹390 பாக்கி கொடுக்க பணம் இல்லை. ஆட்டோ விட்டு இறங்கினார், 2-3 ஆட்டோ சாரதிகளிடம் கேட்டார், அவர்களிடமும் இல்லை. 5 நிமிஷத்துக்கு பிறகு ₹390 பாக்கி கொடுத்துட்டு, அவர் டப் டப் டப் என ஆட்டோவை ஓட்டிச் சென்று விட்டார்.
ஆஹா! இதுவே சென்னையாக இருந்திருந்தால். ₹500க்கு சில்லரை கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், என் மூதாதையர் 4-5பரம்பரையும் இல்ல இழுத்து தெருல விட்டிருப்பாங்க...
#எந்த-மாதிரி-சமூகத்துல-வாழுரோம்
#emsv
No comments:
Post a Comment