கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை சொல்லும் blog இல்லை இது.
சமீபத்தில் ஒரு மாநகரில் கடவுளுக்கு கோடானுகோடிக் கணக்கில் பணம் வசூல் செய்து, கடனை வாங்கி, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கோவில் கட்டினார்கள்.
அதனைக் கண்ட முற்போக்குவாதிகள், கிண்டலாக கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே, அவருக்கு எதுக்கு இவ்ளோ செலவில் கோவில் என்று கேள்வி எழுப்பினார்களாம்.
அவர்களுக்கு மூக்கிலடித்தாற்போல, அந்தக் கோவிலின் முக்கிய ப்ரதிநிதி ஒருவர், காற்று எங்கும்தான் இருக்கிறது, ஆனால் அதை உணர்த்த ஒரு காற்றாடி (fan) தேவையாக இருல்கிறதல்லவா, அது போலத்தான் கடவுளும் எங்கும் இருக்கிறார், ஆனால் அதை நமக்கு உணர்த்த ஒரு கோவில் தேவை என்றார்.
இத்துடன் அவர்களின் சர்ச்சை முடிந்தது.
ஆனால் என் மனதிலோ, காற்றை சுவர் எழுப்பி நாம்தானே உணர முடியாதபடி செய்துள்ளோம், அப்படி செய்யவில்லை என்றால் காற்றாடி தேவையில்லையே என்ற கேள்வி எழுகிறது.
இதற்கும் ஒரு புத்திசாலித்தனமான பதில் நிச்சயம் இருக்கும், ஆனால் என் வாதம் அதுவல்ல. எதயுமே நடுவுநிலையுடன், மிகையாக்காமல், அளவுடன் செய்தால் எதுவுமே வரவேற்கத்தக்கது.