Saturday, July 21, 2012

அந்த ரூம் இருட்டா இல்லே...

அப்போது நாங்கள் வசித்த இடத்தில் மின்சார இணைப்பு கிடையாது.  தினமும் லாந்தர் விளக்குதான்.  அம்மா தினமும் லாந்தர் விளக்கின் கண்ணாடி சிம்னீ-யை நன்கு சுத்தம் செய்வார்கள்.  அப்போதுதான் வெளிச்சம் நல்லா தெரியும் என்று.

ஒருநாள்....
"டேய் ரவி, இந்தா இந்த லாந்தர் விளக்க அந்த இருட்டா இருக்குற ரூம்ல வை..." என்று என்னிடம் ஒரு லாந்தர் விளக்கை கொடுத்தார் அம்மா.


போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டேன்...கையில் லாந்தர் விளக்கு இன்னும் இருப்பதைக் கண்டு 
"என்ன ஆச்சு?  ஏன் விளக்கை அங்கே வைக்க வில்லை" என்று வினவினார் அம்மா...

"நான் போயி பார்த்தேன் மா, நீ சொன்னா மாதிரி அந்த ரூம் இருட்டா இல்லே" என்றேன் நான்.

நம்புங்க நான் சரியாத்தான் சொன்னே...