Monday, July 15, 2013

Cock-a-doodle-doo...

நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில், நிற்க ஸ்கூல் போகும் காலத்தில் (இதுதான் சரி - யாரு படிச்சா), நிறைய அட்டூழியம் பண்ணிருக்கேன், அதுக்காக நிறைய அடியும் வாங்கிருக்கேன்.

Parallel edit மாதிரி அடுத்த பத்தியை படிக்கவும்.

வீட்டு அருகில் (100மீ தள்ளி இருக்கும்) ஒருவர் தன் வீட்டின் மாடியில் கோழிப் பண்ணை வைத்து பராமரித்து வந்தார். சுமார் 100-150 கோழி இருக்கலாம்.

சரி இப்போ கதைக்கு வருவோம்....

இன்னும் நல்லா நினைவிருக்கு, 6ம் வகுப்பு  படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் நிறைய மிமிக்ரி பண்ணுவேன்.  நாய், கழுதை, யானை, பக்ஷி, குதிரை, பூனை, பல்லி, மோட்டார் பைக் இப்படி இன்னும் பல...

புதிசா ஏதாவது செய்யலாம்னு சேவலைப் போல மிமிக் பண்ணி சாதகம் செய்துக் கொண்டிருந்தேன், அப்பா அப்படிப் பண்ணினாலே கடுப்பாவார், கடுப்பேத்தவே இன்னும் நிறைய பண்ணுவேன்.  சில நாட்களிலேயே நிஜ சேவலைப் போலவே மிமிக் செய்தேன்.

இரவு மணி 8 இருக்கும், அப்பா அலுவலகத்திலிருந்து வந்தார், அவருக்கு என்ன கோவமோ தெரியவில்லை என்னிடம் காட்டிவிட்டார்.  அந்தக் கவலையில் நான் மொட்டை மாடிக்கு போய் உட்கார்ந்து விட்டேன்.

அங்க போயாச்சு, இப்போ பொழுது போகணுமே. என் சாத'கத்த' ஆரம்பிச்சேன்.  அவ்ளோதான், அருகில் இருக்கும் கோழிப்பண்ணையில் ஒரே கலாட்டா.  கோழிகள் கொக்கொக்கொ என்று கோக்கரிக்க ஆரம்பித்து, அது அடங்க கிட்டத்டட்ட 1மணி நேரம் ஆச்சு. 

கோழிப் பண்ணை முதலாளிக்கு "நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்தது திடீர்னு ஏன் கோழி கத்த ஆரம்பித்தது" என்று ஒரே சந்தேகம். நல்ல வேளை காரணகர்த்தா நான் என்று தெரியாது, தெரிந்திருந்தால் சண்டைக்கு வந்திருக்கலாம்.

இதை சமீபத்தில் அப்பா தன் பேத்திகளிடம் வேடைக்கையாக இதைப் பகிர, என் சின்னவள் cock-a-doodle-do செய்யச் சொல்லி ஒரே தொல்லை...

இப்போ என்ன முயற்ச்சித்தாலும் வர மாட்டேங்கி...