Sunday, October 23, 2011

எது முக்கியம்?


ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர
சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும்.
வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு
ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி
ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய
பண்போ அவரைக் கவர்ந்தது.

கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர்,
சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும்.
கொண்டு வருகிறாயா?

டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு
சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப்
போகிறார். போகவேண்டும்.

ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது,
இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!

டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா,
ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது
வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?

#படித்ததில் பிடித்தது