Tuesday, October 15, 2013

எந்த மாதிரி சமூகத்துல வாழுறோம் #2

நாள்: அக் 15, 2013
நேரம்:மாலை மணி 6:00
இடம்: மும்பை

மாலை மணி 9க்கு சென்னை போகும் விமானம். பொதுவாக வீட்டிலிந்து விமான நிலையம் செல்ல 20நிமிஷம் போதும், ஆனால் போக்குவரத்து நெரிசலால் 45~50நிமிஷம் ஆகலாம் என்று எதுக்கும் 6:30க்கே ஆட்டோ எடுக்க எண்ணினேன்.

எண்ணியவாறே 6:25க்கு புறப்பட்டு, 6:30 சுமார்க்கு ஆட்டோவிலும் ஏறியாயிற்று.

நெரிசல்...நெரிசல்...நெரிசல்...

2கிமீ நகர 25நிமிடம் ஆயிற்று.  Western Highwayயில் நெரிசல் கிடையாது.  அதை இணைக்கும் சாலைகள்தான் நெரிசலில் மூழ்கிக்கிடந்தன.  கூகிளின் உதவியால் நெரிசல் கம்மியான சாலைகளில் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுனருக்கு பரிந்துரைத்துக் கொண்டு வந்தேன்.

ஆஹா என்ன அதிசயம் அடுத்த 10தே நிமிஷத்தில் Western Highway வந்தடைஞ்சாச்சு.  இனி தடையில்லாமல் செல்லலாம் என்று நினைத்ததுதான் தாமதம் ஆட்டோ ஓட்டுனர் ஓரமாக வண்டியை நிறுத்தினார்.  என்னவாயிற்று என்று கேட்டேன், பாவம் அவசரம் போலிருக்கு, சுண்டு விரலைக் காட்டிவிட்டு ஓடினார்.

1நிமிஷம் கழித்து ஒரு வித பயத்துடன் ஒடிவந்து வண்டியில் அமர்ந்தார்.  ஹிந்தியில் ஏதோ சொன்னார், எனக்கு சரியாக புரியவில்லை.  என்ன என்று கேட்பதற்குள், வண்டியின் வலப் புறமாக Highway Patrol Police, ₹500 அபராதம் கட்ட வேண்டும் என்று ஓட்டுனரிடம் கூற, ஓட்டுனரோ தன்னிடம் அவளவு பணம் இல்லை, ₹50தான் இருக்கிறது, அதை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.  போலீஸ்காரர் மசியவில்லை குறைந்தது ₹200 கொடு விடுகிறேன் என்றார்.

ஓட்டுனரோ (என்னை காண்பித்து) இவரின் விமானத்துக்கு நேரமாகிறது தயவுவெய்து ₹50 வாங்கிக் கொண்டு விட்டு விடுங்கள், அம்மா சத்தியமாக இனி இந்த தவறை செய்ய மாட்டேன் என்று அழாத குறையாக கெஞ்சினார்.  கடைசியில் என்னிடமிருந்து ₹100 வாங்கி போலீசாரிடம் தந்து பேரத்தை பூர்த்தி செய்தார்.

வண்டி நகரத் தொடங்கியது...

ஆட்டோ ஓடிய வேகத்தை விட, என் மனதில் பல விஷயங்கள் ஓடின.  ₹100 முன் பணமாக வாங்கினாரே மொத்தத்தில் அதை கழிச்சுப்பாரா மாட்டாரா?!  இது ஏதாவது அவர்களுக்குள் நாடகமா என்றெல்லாம்...

பாவம் வழி முழுவதும் ஏதோ புலம்பியபோதும் வண்டியை செவ்வனே ஓட்டி வந்து 7:30க்கு விமான நிலையம் வந்தடைந்தார்.  அப்போது ஏனோ என் மனதுக்குள் ஒரு நெருடல்...

மீட்டர் ₹144 காண்பித்தது. ₹100 கொடுத்தேன். தன் சட்டைப்பைதில் கைவிட்டவாறே ₹4 இருக்கா என்றார்.  "இல்லை மிச்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன்.  அவர் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கணுமே, கண்கள் கலங்கன... எனக்கும்தான்...

No comments:

Post a Comment