Sunday, July 28, 2013

செம்ம தூக்கம்...

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன்... ஏசியின் மிதமான காற்று வருடிக் கொண்டிருந்தது...
திடீரென ஒரே இருட்டு... தூக்கக் கலக்கம்...

மனைவி "பவர் போயிடுச்சு fanனப் போடுமா" என்று மகளிடம் கூற,

நான் "அதெப்படி பவர் போகும்?" என்றேன்.

மகள் fan போட்டுவிட்டு மறுபடியும் படுத்தாள்.

நான் மீண்டும் "அதெப்படி ஏசிக்கு மட்டும் பவர் போச்சு?" என்றேன்.

மகளோ "டாடி, படுத்தாதீங்க, முழிச்சுக்கங்க, நீங்க இருக்குறது சென்னைல, டோக்கியோ இல்ல, இது இங்க சகஜம். fan inverterல ஓடுது" என்றாள்.

எனக்கு நிஜமாகவே அப்போது ஒன்றும் புரியவில்லை, முழுதும் விழிப்பு வந்ததும் எல்லாமே புரிந்தது.

செம்ம தூக்கம்...

No comments:

Post a Comment