கடிதத்துல PS: ன்னு போட்டு எழுதுவாங்க அது ஏன்னு தெரியுமா?
அந்த காலத்துல கடிதத்த கையால் எழுதுவாங்க, இன்னும் கொஞ்சம் விஞ்ஞானம் வளர்ந்த பிறகு தட்டச்சு உபயோகிச்சாங்க. இரெண்டு முறையிலுமே கடிதத்தில் இருக்கும் சில வரிகளை மாற்றி அமைக்கவோ, தவறுகளை திருத்தவோ, வேறு வார்தைகளில் விளக்கவோ உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
காரணம்:
- எழுதும் போதோ, தட்டச்சு உப்யோகிக்கும் போதோ பின்னோக்கி செல்ல முடியா து
- அந்த காலத்தில் தாள்களும் இப்போது கிடைக்கும் அளவுக்கு கிடைக்காது
அதனாலேயே இந்த PS முறையை கையாண்டனர்.
சரி PS என்றால் என்ன? அதற்கு வருவோம்.
PS: means "post scriptum" லத்தின மொழியில் இதற்கு "after the written" என்று பொருள்.
"சரி இதெல்லாம் சொல்ல நீங்க எதுக்கு blog எழுதணும்? googleல போயி தேடினா சொல்லிட்டுப் போகுது" என்று நினைக்கும் உங்களுக்கும்தான் பின் வருபவை.
இவற்றை ஹாஸ்யமாக சொல்லிக் கேட்டதுண்டு (ஆதாரம் கேட்காதீங்க எப்பவோ ரேடியோல கேட்டதது):
* சத்ய நாராயண பூஜையில் பூனையை பிடித்து கூடையில் அடைப்பார்களாம். ஏனென்று கேட்டால் அதுதான் வழக்கம் என்று சொல்லுவார்களாம்.
ஏன் பூனை? எப்போதோ யாரோ சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பூனை குறுக்கவும் நெடுக்கவும் ஓடிக் கொண்டிருந்ததாம். அதை கட்டுப் படுத்தவே ஒரு கூடையை எடுத்து அதில் அடைக்க சொல்லிருக்கார்கள். அதுவே நாளடைவில் வழக்கமாகிவிட்டது.
* அதே போல் ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ (Othello) நாடகத்தின் போது திடீரென காட்சியிலிருந்து விலகிச் சென்று விட்டு ஒரு நிமிஷம் கழித்து வருவாராம் ஒரு பாத்திரம். ஏனென்று கேட்டதற்கு யாருக்கும் காரணம் தெரியவில்லையாம்.
ஏன் திடீர் விலகல்? ஒரு ப்ரபல நடிகர் நடித்து வந்த காலத்தில் அவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததாம், அந்த நாடகத்தின் காட்சியின் போது வாயில் இருப்பதை துப்பவே காட்சியிலிருந்து விலகினாராம். பிற்காலத்தில் அந்த ப்ரபல நடிகரே இதைச் சொல்லிருக்காராம்.
வழக்கம் - நாம் எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல்/புரியாமல் செய்வதுதான் வழக்கம். அதுதானே நம் வழக்கமும். இதை மதத்தோடு சேர்த்து பார்க்கும் போது சில பல முற்போக்கு சிந்தனையாளர்கள் இதயே மூட நம்பிக்கை எனவும் கூறுவார்கள் . ஆனால் மற்றவர்கள் செய்வதில் மட்டுமே குற்றம் கண்டுபிடிப்ப்தில்தான் நாம் கெட்டிக்காரகள் ஆயிற்றே.
சரி மறுபடி இந்த PSக்கு வருவோம். அந்த காலத்தில் PS போட்டு எழுதினாங்க சரி, ஆனால் அதையே இப்போதும் ஏன் பயன் படுத்தணும்? குறிப்பாக மின்னஞ்சல்களில், மின் அச்சுப் பொறியில் அச்சிடும் போது, கீச்சும் போது?
Claimer: PS என்ற உப்யோகத்தை ஒரு முற்போக்கு சிந்தனையாளரின் கீச்சில் பார்ததால் அகத்தூண்டுதலளிக்கப்பட்ட blogதான் இது.
No comments:
Post a Comment