Wednesday, February 13, 2013

ராமனா? ராவணனா?

Interesting discussion... என்னால் முடிந்தவரை சேகரித்தது...
.
.


umakrishh உமாக்ருஷ்
ஆசைக்கு இணங்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தான் எனக்குத் தெரிந்த விபரம் இது தவறு இருந்தால் திருத்தவும் 3/3

Talkativewriter Prathipa
@umakrishh அவனை தேடி தான் பெண்கள் வந்தனர், சீதை வரும் வரை, ராவணன் நல்லவன் தான்

umakrishh உமாக்ருஷ்
. @Talkativewriter நான் பார்த்த /கேட்ட கதையில் அந்த சாபம் காரணமாகத் தான் அவன் தொடவில்லை என்றே இருந்தது

Talkativewriter Prathipa
@umakrishh அவளை கடத்தியதர்க்கு கூடகாரணம் தங்கை மேல் இருந்த பாசம் தவிர்த்து,சீதை இல்லை,அவள் நிராகரித்ததால் வந்தகோபமாய் கூட இருக்கலாம்,ஈகோ

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter தங்கை சொல்லித்தான் கடத்தினான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அவன் ஏங்கியதுண்டு சீதாவுக்காக

Talkativewriter Prathipa
@umakrishh நீங்கள் சொல்லுவது போல்,இவளுக்கு ஏன் என்னைபிடிக்கவில்லை என்கிற ஈகோ இருக்கலாமே தவிர, பெண் பித்தனாய் அவனை புராணம்கூட சொல்லவில்லை

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter மனைவியை அருகில் வைத்துக் கொண்டே இன்னொருவன் மனைவியை கவர்ந்தவன் நல்லவனா?

Koothaadi கூத்தாடி
@umakrishh விக்ரம் பேச்சிலர் தானே?! நீங்கள் பார்த்தது இந்தி ராவணனா? தமிழா? :)))))) #VPTS @Talkativewriter

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter சீதை என்பதால் அவள் வேதனை வெளியே தெரிந்தது ராவணனின் மனைவி மனநிலை எவர் அறிவார்?

Talkativewriter Prathipa
@umakrishh ஒரு மன்னனாக ராவணன் குறை வைக்கவில்லை, மனைவிக்கும் நல்ல கணவனை இருந்ததை படித்திருக்கிறேன்,

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter பிறன் மனை நாடிவிட்டானே நல்ல கணவன் பிறழ்ந்தாலே போச்சே..ராமனுக்கும் அப்படித்தானே

Talkativewriter Prathipa
@umakrishh சீதையின் அழகு தவறு நேர்ந்த பிறகு ஒரு வசதி தானே தவிர, உண்மையில்கடத்தியபோது தேவைப் பட்டது பெண் அல்ல

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter பல தார மணத்தில் பெண்களும் விரும்பியே இசைந்திருப்பார்கள் ஆனால் இசையாத பெண்ணை இசைய வைக்கும் முயற்சி தவறில்லையா

Talkativewriter Prathipa
@umakrishh சீதை ராவணனால் வருத்த பட்டதை விட நொந்து நூடில்ஸ் ஆனது ராமனால் தான், பெரிய துரோகி ராமன், ரக்ஷஷன் ராவணன்-

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter ராமனின் தவறுகளை என்னால் நியாயப் படுத்தவே முடியாது போலவே ராவணனின் நியாயங்களையும் :) #dot

Talkativewriter Prathipa
@umakrishh அப்படிதான் சமாதானபடுத்திக் கொள்ளவேண்டியாதாய் இருக்கு,கோவில்சென்று ராமன் சிலையை பார்க்கும்போது நான் டோஸ் விட தவறுவதில்லை :-))

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter ஹா ஹா மனித அவதாரத்தினை முழுமையடைய வைத்துவிட்டார் தன் தவறுகளால் :))

Talkativewriter Prathipa
@umakrishh ஹஹா, உண்மை தான்...

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter பிடிக்காத பெண்ணை பிடிக்கவில்லை எனச் சொன்ன காரணத்திற்காக அடைந்தே ஆக வேண்டும் என்ற மனநிலையை /1

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter நான் நியாயப் படுத்த விரும்பவில்லை #வினோதினி மீது ஆசிட் வீசினவனுகும் அவனுக்கும் என்ன வித்தியாசம் 2/2

Talkativewriter Prathipa
@umakrishh அதை நான் நியாப் படுத்த வில்லை, ஆனால் அவனை கெட்டவனாக உருகவாக படுத்துவது தவறு, உண்மையில் ராமன் தான் இங்கு வில்லன், ராவணன்இல்லை

Talkativewriter Prathipa
@umakrishh அத்தனை முறை தீக்குளித்தும் மறுபடியும் காட்டிற்கு அனுப்பிய ராமனை விட ராவணன் சிறந்தவன் தான் :-))

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter எனக்கு ரெண்டு பேருமே வேறு வேறு விதத்தில் தவறு செய்தவர்கள் ஒப்பீடு தான் பிடிக்கல.காட்டிற்கு அனுப்பியதால் ராமன் கெட்டவன்

Talkativewriter Prathipa
@umakrishh அந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பலதாரம் புரிவது தர்மமாக கருத பட்டது, ஆனால் ராமனை விட என்னை பொறுத்த வரை ராவணன் சிறந்தவன்

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter பல தார மனம் புரிவது பற்றி நானும் படிச்சிருக்கேன் அது அந்தக் கால அரசியலும் கூட பொன்னியின் செல்வனுக்கு கூட 11மனைவிகள்

Talkativewriter Prathipa
@umakrishh நிஜமான சிவா பக்தன், எந்த பெண்ணையும் வற்புறுத்தாதவன், சீதையை கூட,அதுஉயிர் மேல் உள்ள பயம் என்றாலும், அவளை தொட்டதில்லை அவன்

umakrishh உமாக்ருஷ்
@Talkativewriter உயிர் மேல் உள்ள பயத்தால் தொடாதவன் எப்படி உத்தமனாவான்?

Talkativewriter Prathipa
@umakrishh இருக்கலாம்,அதுஒன்று மாத்திரமே அவன் மேல் சொல்லக்கூடிய குற்றம்,இலங்கை அவன் அரசாட்சியில் கோலாகலமாய் இருந்ததையும் மறப்பதற்கு இல்லை

Tottodaing குதர்க்கவாதி
@Talkativewriter இசையிலும் வல்லவனாம், ராவணன்! @umakrishh

Tottodaing குதர்க்கவாதி
@umakrishh விருப்பத்திற்கு மாறாக தொடாதபோதில் ராவணன் கெட்டவனல்ல, சந்தேகப்பட்டபோது, ராமன் நல்லவனல்ல! @Talkativewriter

No comments:

Post a Comment