பள்ளிக் கூடத்தில் புதிதாக பயிற்சியர் ஆசிரியையாக சேர்ந்தாள் லைலா. பள்ளிக்கு சென்ற முதல் நாளன்று தலைமை ஆசிரியை பள்ளியின் நிறைய விதிமுறைகள், வழிமுறைகளைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அவற்றை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டும் அவற்றை குறிப்பு எடுத்துக் கொண்டும் இருந்தாள் லைலா.
திடீரென "நான் பயிற்சி கொடுக்கும் போது அங்கே என்ன செய்யுறீங்க லைலா", என்று சற்று உரக்கவே கேட்டார் தலைமை ஆசிரியை.
"நீங்கள் கூறுவதை குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் இவற்றை ஆவணமாக்கி விட்டால் பின்னர் வரும் பயிற்சியர் ஆசிரியர்க்கும் உபயோகமாக இருக்குமே என்று எனது ஸ்மார்ட் போனில் குறிப்பெடுக்கிறேன், இவற்றை எளிதாக கணிணிக்கு அனுப்ப முடிவதால் நேரமும் மிச்சம் ஆகுமே", என்று பதில் அளித்தாள் லைலா.
அந்த பதிலில் தலைமை ஆசிரியை அடைந்த மனநிறைவை அவர் முகம் போன விதம் காட்டியது.
'சில நேரங்களில் வினைத்திறமிக்க முறையில் பணியாற்றினாலும் அதை பாராட்டக் கூடிய நிலையில் மேலதிகாரிகள் இருப்பதில்லை', என்று லைலாவின் கணவர் கூறியது ஏனோ சட்டென நினைவுக்கு வந்தது.
அடுத்த நாள் மறக்காமல் ஒரு குறிப்பேட்டு புத்தகத்தை பையில் எடுத்து வைக்க மறக்கவில்லை லைலா.

சில சமயங்களில் நாம் என்னதான் புதுமையாகவும், வினைத்திறனுடனும் செய்தாலும் மற்றவருக்காக பாரம்பரிய முறையில் செய்வது போல நடிக்கவே வேண்டியுள்ளது.
Yup.. it is true.
ReplyDeleteவாழ்த்துகள் ...short and crisp :))
ReplyDeleteஸ்மார்ட் போனில் லைலா ட்விட்டிக் கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டோம். :)))
ReplyDeletegood one :))