Tuesday, February 28, 2012

தேள் என்ன சாப்பிடும்?

ஒரு சமயம் நாங்கள் மின்சார இரயிலில் போய்க் கொண்டிருந்தோம்.  இரயிலில் ஒருவர் விடாது ஏதோ கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.  அதற்கு சளைக்காமல் இன்னொருவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்களும் அவர்கள் இருவரும் நண்பர்கள் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என நினைத்தோம்.

ஆனால் கேள்விகளின் நடு நடுவே "தேள் என்ன சாப்பிடும்" என்று கேட்ப்பார்.  மற்றவர் அதற்கு "தெரியலியே" என்பார்.  இது ஒரு 10-20நிமிடத்திற்கு தொடர்ந்தது.

பிறகுதான் தெரிந்தது கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர் சிறிது மனநலம் குன்றியவர் என்று.  அவரின் சில கேள்விகள் நல்ல புத்திசாலித்தனமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப "தேள் என்ன சாப்பிடும்?" என்று கேட்ப்பதை விட மாட்டார்.

இதுவே எங்கள் குடும்பத்தில் "தவிர்க்க நினைத்தும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை" குறிப்பிட ஒரு   code wordஆக மாறிவிட்டது.

கீழ்கண்ட கண்ணொலியை 1:54 முதல் பார்க்கவும்.  இதை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு "தேள் என்ன சாப்பிடும்" நினைவுதான் வரும்.
http://www.youtube.com/watch?v=a8TLWYzplmc

No comments:

Post a Comment