ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று
கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார்.
வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு
பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர்.
அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3
நீச்சல் குளங்கள் என்று கேட்டனர்.
அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக,
மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார்.
அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று
கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்.
#படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment