Friday, July 11, 2014

அவகாடோ டிப்புடன் சிம்பிள் சாலட்...

தேவைதான காய்கறிகள்:
□கேரட்
□ஆஸ்பராகஸ்
□ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ்
□ப்ராக்கொல்லி
□காலிஃபிளவர்
□செர்ரி டொமேட்டோஸ்
□பேபி கார்ன்
□அவகாடோ

செய்முறை:
○கேரட்டை 2x¼x¼ இஞ்ச்க்கும்
○ஆஸ்பராகஸ்ஸை 2 இஞ்ச்க்கும்
நறுக்கிக் கொள்ளவும்
○ப்ராகொலி, காலிஃபிளவர் சின்னச் சின்ன, ஃபளவர்லெட்ஸாக வெட்டிக் கொள்ளவும்
○கேரட், பேபி கார்ன், செர்ரி டொமேட்டோஸ் தவிர மத்த காய்கறிகளை வேக வைத்து நீரை நன்கு வடிக்கட்டவும்.

அவகாடோ டிப் செய்முறை:
○அவகாடோ தோலை எடுத்து, அதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
○மை போல அரைத்த அவகாடோவில் மிளகு பொடி, உப்பு, சிறிது எலுமிச்சை சாறு விட்டு நன்கு கலக்கவும்.

சாலட் ரெடி.

சாப்பிடும் முறை:
▣காய்கறியில் ஒன்றை கையில் எடுத்து அவகாடோ டிப்பில் முக்கி வாயில் போட்டு சுவைக்கவும்.