Saturday, July 28, 2012

கடைசியா பாயசம் சாப்பிட்டால் ராஜ வம்சத்தில் பிறக்கலாம்...

சென்ற முறை இந்தியா வந்திருந்த போது நண்பர் ஒருவரின் இல்லத்திற்க்கு விருந்துக்காக போக வேண்டியிருந்தது...

முதலில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப் பட்டது... பிறகு பெரியவர்களுக்கு...

சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஒரு 'கப்'பில் பாயசம் பரிமாறப்பட்டது... நானும் என் மனைவியும் அதை அருந்தாமல் சாப்பிடுவதில் கண்ணாக இருந்தோம்.

நண்பரின் தாயாருக்கு இருப்பு கொள்ளவில்லை என் மனைவியை கேட்டே விட்டார் "ஏன் இந்த பாயசம் பிடிக்காதா?  இன்னும் அருந்தவேயில்லை?" என்று.

"இல்லை aunty எல்லாம் சாப்பிட்டதும் கடைசியாக சாப்பிடுவேன்." என்றாள் என் மனைவி.

"ஓ!  அடுத்த ஜென்மத்தில் ராஜ குடும்பத்தில் பிறக்கவா...? நல்லாதுதானே!!!" என்றார் நண்பரின் தாயார்.

இப்போது என் turn போல அவர் என் பக்கம் திரும்பி "நீங்களும் அதே காரணம்தானா?" என்று கேட்டார்.

"அது என்னவோ அவள் (என் மனைவி) மட்டும் ராஜ குடும்பத்தில் பிறந்து நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தால் இந்த ஜென்மத்தில் இருக்கும் கடுப்பில் அடுத்த ஜென்மத்தில் பழி தீர்த்தால் கஷ்டம் அதான்" என்றேன்...ஹி...ஹி...

குறிப்பு: அந்த பாயசம் என்னுடைய பிரியமான பாயசத்தில் ஒண்று...